• Jan 16 2025

மீனவர் கைது விவகாரம் - ஜெய்சங்கருக்கு மீண்டும் கடிதம் எழுதிய மு.க ஸ்டாலின்!

Chithra / Jan 10th 2025, 9:15 am
image


இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தற்சமயம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். 

மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதாகவும் அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

உரிய இராஜதந்திர வழிமுறைகளை முன்னெடுத்து, அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


மீனவர் கைது விவகாரம் - ஜெய்சங்கருக்கு மீண்டும் கடிதம் எழுதிய மு.க ஸ்டாலின் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தற்சமயம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதாகவும் அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய இராஜதந்திர வழிமுறைகளை முன்னெடுத்து, அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement