• Feb 25 2025

3 பிள்ளைகளின் தாயை பலியெடுத்த குரங்கு - புதுக்குடியிருப்பில் துயரம்

Thansita / Feb 24th 2025, 11:07 pm
image

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த  துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது 

புதுக்குடியிருப்பு பகுதியில்  மரணச்சடங்கு ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிய வேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் கணவர், மனைவி, 6 மாத குழந்தையுடன் பயணித்துள்ளனர்

பயணித்துக் கொண்டிருந்த வேளை குரங்கு ஒன்று குறுக்கே மோதியதில் தாய் தலையில் அடிபட்டதனால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அகிலன் தனுஷியா என்ற 35 வயதான இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார்.

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

3 பிள்ளைகளின் தாயை பலியெடுத்த குரங்கு - புதுக்குடியிருப்பில் துயரம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த  துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது புதுக்குடியிருப்பு பகுதியில்  மரணச்சடங்கு ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிய வேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் கணவர், மனைவி, 6 மாத குழந்தையுடன் பயணித்துள்ளனர்பயணித்துக் கொண்டிருந்த வேளை குரங்கு ஒன்று குறுக்கே மோதியதில் தாய் தலையில் அடிபட்டதனால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அகிலன் தனுஷியா என்ற 35 வயதான இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார்.மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement