• May 11 2024

மஹிந்த கோட்டாவை மேலும் பல நாடுகள் தடை செய்யும் - முக்கிய நாட்டின் எம்.பி உறுதி!

Sharmi / Jan 12th 2023, 10:32 pm
image

Advertisement

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபயவுக்கு எதிராக கனடா கொண்டு வந்த தடையினை எதனை செய்யமுடியாது ஆனால் இவ்வாறு கனடா தடை செய்வதால் வேறு நாடுகளும் இவ்வாறு தடை செய்வதற்கான சந்தர்ப்பம் அதிகம் என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

                      

கனடாவால் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபயவிற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ரணில் - மஹிந்த ராஜபக்ச கூட்டணி அரசால் சர்வதேச ராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது.

நாங்கள் எமது அரசாங்க கொள்கைகளுக்கு அமைய எமது கடமைகளை செய்துகொண்டு வருகின்றோம். இதற்கு பின்னால் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஜெனிவா மற்றும் இலங்கையில் பலரை சந்தித்துள்ளோம். அவர்களுடைய வேதனைகளால் தான் நாம் இந்த தடையை கொண்டுவர சந்தர்ப்பம் கிடைத்தது.

அவர்களை பற்றி நாம் யோசித்து அவர்களுக்கான ஆதரவை நாங்கள் வழங்க வேண்டும். இந்த தடைகளை கொண்டு வருவது சிக்கலான விடயம் தான்.

ஏன் என்றால் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு நாடுகளுடன் வெள்வேறு விதமான உறவுகளை வைத்திருப்பார்கள். இவ்வாறான ஒரு நிலைமையில் இப்படி ஒரு தடையை கொண்டுவரும் போது

அதுவும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி இருவருக்கு இப்படி ஒரு தடை கொண்டு வருவது மிகவும் கஸ்டமான விடயம். இருந்தாலும் இவர்கள் செய்த அநியாயங்களுக்கு கனடா தனிப்படட முறையில் வேறு ஏதும் செய்வதற்கான சந்தர்ப்பம் குறைவு.

ஆனாலும் இப்படி ஒரு முடிவு எடுத்ததற்கு காரணம் வேறு நாடுகளும் இவ்வாறான தடைகளை கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் என்றும் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

மஹிந்த கோட்டாவை மேலும் பல நாடுகள் தடை செய்யும் - முக்கிய நாட்டின் எம்.பி உறுதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபயவுக்கு எதிராக கனடா கொண்டு வந்த தடையினை எதனை செய்யமுடியாது ஆனால் இவ்வாறு கனடா தடை செய்வதால் வேறு நாடுகளும் இவ்வாறு தடை செய்வதற்கான சந்தர்ப்பம் அதிகம் என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.                      கனடாவால் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபயவிற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.ரணில் - மஹிந்த ராஜபக்ச கூட்டணி அரசால் சர்வதேச ராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது.நாங்கள் எமது அரசாங்க கொள்கைகளுக்கு அமைய எமது கடமைகளை செய்துகொண்டு வருகின்றோம். இதற்கு பின்னால் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாங்கள் ஜெனிவா மற்றும் இலங்கையில் பலரை சந்தித்துள்ளோம். அவர்களுடைய வேதனைகளால் தான் நாம் இந்த தடையை கொண்டுவர சந்தர்ப்பம் கிடைத்தது.அவர்களை பற்றி நாம் யோசித்து அவர்களுக்கான ஆதரவை நாங்கள் வழங்க வேண்டும். இந்த தடைகளை கொண்டு வருவது சிக்கலான விடயம் தான்.ஏன் என்றால் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு நாடுகளுடன் வெள்வேறு விதமான உறவுகளை வைத்திருப்பார்கள். இவ்வாறான ஒரு நிலைமையில் இப்படி ஒரு தடையை கொண்டுவரும் போதுஅதுவும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி இருவருக்கு இப்படி ஒரு தடை கொண்டு வருவது மிகவும் கஸ்டமான விடயம். இருந்தாலும் இவர்கள் செய்த அநியாயங்களுக்கு கனடா தனிப்படட முறையில் வேறு ஏதும் செய்வதற்கான சந்தர்ப்பம் குறைவு.ஆனாலும் இப்படி ஒரு முடிவு எடுத்ததற்கு காரணம் வேறு நாடுகளும் இவ்வாறான தடைகளை கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் என்றும் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement