• May 10 2026

இந்தியாவில் மூடுபனியால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

Chithra / Dec 20th 2025, 2:03 pm
image


வட இந்தியா முழுவதும் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 


விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 66 விமானங்களும், அங்கிருந்து புறப்படவிருந்த 63 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


மூடுபனி தொடர்ந்து சூழ்ந்துள்ளதால், விமானங்கள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு இந்திரா காந்தி விமான நிலையம் இன்று முன்னதாக பயணிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. 


மூடுபனி காரணமாக விமானத்தை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக பல விமான சேவைகள் தாமதமாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


இதனால் இன்று விமானநிலையத்தின் ஊடாக பயணிக்க விருந்த பல பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியாவில் மூடுபனியால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து வட இந்தியா முழுவதும் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 66 விமானங்களும், அங்கிருந்து புறப்படவிருந்த 63 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூடுபனி தொடர்ந்து சூழ்ந்துள்ளதால், விமானங்கள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு இந்திரா காந்தி விமான நிலையம் இன்று முன்னதாக பயணிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. மூடுபனி காரணமாக விமானத்தை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக பல விமான சேவைகள் தாமதமாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று விமானநிலையத்தின் ஊடாக பயணிக்க விருந்த பல பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement