• Apr 16 2026

நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

Chithra / Mar 11th 2026, 8:24 am
image


இலங்கை மின்சார சபை மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதற்கைமைய, 12,000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம், அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மதியம் மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டது.


இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து, சுமார் 25 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.


மின்சார சபையை புதிய நிறுவனங்களாக மாற்றும் செயல்முறையின் போது, ஊழியர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாமை இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின் தடைகள் இலங்கை மின்சார சபை மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கைமைய, 12,000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம், அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மதியம் மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டது.இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து, சுமார் 25 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.மின்சார சபையை புதிய நிறுவனங்களாக மாற்றும் செயல்முறையின் போது, ஊழியர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாமை இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement