முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட 2325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 22ம் திகதி தொடக்கம் மே மாதம் 01ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இராணுவத்தைச் சேர்ந்த 2017 பேரும், கடற்படையின் 145 பேரும், விமானப்படையினர் 163 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்களை அந்தந்த படைப்பிரிவின் விசேட விசாரணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளின் பின்னர் அவர்களை சட்டரீதியாக படைப்பிரிவுகளில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முப்படைகளில் இருந்து தப்பியோடிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட 2325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த பெப்ரவரி 22ம் திகதி தொடக்கம் மே மாதம் 01ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், இராணுவத்தைச் சேர்ந்த 2017 பேரும், கடற்படையின் 145 பேரும், விமானப்படையினர் 163 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்இவர்களை அந்தந்த படைப்பிரிவின் விசேட விசாரணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.இவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளின் பின்னர் அவர்களை சட்டரீதியாக படைப்பிரிவுகளில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.