• Sep 21 2024

பலத்த மழையால் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - 27 வீடுகள் சேதம்..! வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

Chithra / Aug 20th 2024, 12:18 pm
image

Advertisement

 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் களுத்துறை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 929 குடும்பங்களைச் சேர்ந்த 3,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையினால் இருவர் காயமடைந்துள்ளதுடன், 27 வீடுகளுக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் மதுராவளை பிரதேச செயலகப் பிரிவில் வரகாகொட கலவெல்லவ வீதி, அலமோதர- பரகஸ்தோட்ட வீதி, மில்லனிய பிரதேச செயலகப் பிரிவின் பனாகொட- நர்துபான வீதி, புலத்சிங்கல - மொல்காவ வீதி, செங்கலத்தலை வீதி, உப்பலத்தீவில் உள்ள பல வீதிகள் மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவில் பதுரலிய - பெனிகல வீதி ஆகியன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு அபாயம் காரணமாக சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

கொழும்பு, காலி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

பலத்த மழையால் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - 27 வீடுகள் சேதம். வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்  நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் களுத்துறை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 929 குடும்பங்களைச் சேர்ந்த 3,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.சீரற்ற வானிலையினால் இருவர் காயமடைந்துள்ளதுடன், 27 வீடுகளுக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தின் மதுராவளை பிரதேச செயலகப் பிரிவில் வரகாகொட கலவெல்லவ வீதி, அலமோதர- பரகஸ்தோட்ட வீதி, மில்லனிய பிரதேச செயலகப் பிரிவின் பனாகொட- நர்துபான வீதி, புலத்சிங்கல - மொல்காவ வீதி, செங்கலத்தலை வீதி, உப்பலத்தீவில் உள்ள பல வீதிகள் மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவில் பதுரலிய - பெனிகல வீதி ஆகியன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு அபாயம் காரணமாக சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கொழும்பு, காலி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement