• Oct 19 2024

ஒரே நாளில் 400 விற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு: அதிகரிக்கும் அபாயம் ! samugammedia

Tamil nila / May 16th 2023, 10:48 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 412 டெங்கு நோயாளர்கள் நேற்று பதிவானதாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு 19 ஆவது வார நிறைவில், 1294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இந்த வருடத்தின் 19ஆவது வார நிறைவில் 2029  டெங்கு ​நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்று பதிவான 412 டெங்கு நோயாளர்களில் 261 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். இவர்களில் 132 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள். கம்பஹா மாவட்டத்தில் 98 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் புகைக்கான இரசாயனம், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 400 விற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு: அதிகரிக்கும் அபாயம் samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் 412 டெங்கு நோயாளர்கள் நேற்று பதிவானதாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.2022 ஆம் ஆண்டு 19 ஆவது வார நிறைவில், 1294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.எனினும், இந்த வருடத்தின் 19ஆவது வார நிறைவில் 2029  டெங்கு ​நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.நேற்று பதிவான 412 டெங்கு நோயாளர்களில் 261 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். இவர்களில் 132 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள். கம்பஹா மாவட்டத்தில் 98 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இதனிடையே, டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் புகைக்கான இரசாயனம், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement