திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான ஈரானிய நபர் இன்று அதிகாலை 4:25 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இருந்து G9-502 ஏர் அரேபியா விமானம் மூலமாக நாட்டை வந்தடைந்தார்.
வந்தவுடன், அந்த நபர் ஆன்-அரைவல் விசாவைப் பெறுவதற்காக, குடிவரவு அதிகாரிகளிடம் இத்தாலிய கடவுச்சீட்டை வழங்கினார்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த கடவுச் சீட்டு திருடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, ஈரானிய பிரஜை இலங்கையை ஐரோப்பாவிற்கு செல்லும் வழித்தடமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டு மேலதிக தொழில்நுட்ப சோதனைகளுக்காக குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகள் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கட்டுநாயக்கவில் சிக்கிய ஈரானிய பிரஜை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.40 வயதான ஈரானிய நபர் இன்று அதிகாலை 4:25 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இருந்து G9-502 ஏர் அரேபியா விமானம் மூலமாக நாட்டை வந்தடைந்தார்.வந்தவுடன், அந்த நபர் ஆன்-அரைவல் விசாவைப் பெறுவதற்காக, குடிவரவு அதிகாரிகளிடம் இத்தாலிய கடவுச்சீட்டை வழங்கினார்.இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த கடவுச் சீட்டு திருடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விசாரணையின் போது, ஈரானிய பிரஜை இலங்கையை ஐரோப்பாவிற்கு செல்லும் வழித்தடமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டு மேலதிக தொழில்நுட்ப சோதனைகளுக்காக குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.இது தொடர்பான விசாரணைகள் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.