• Dec 04 2024

சவர்க்காரத்தில் போதைப்பொருள் சிறைச்சாலையிலுள்ள மகனுக்கு கொண்டு சென்ற தாய் கைது

Chithra / Aug 9th 2024, 2:40 pm
image


களுத்துறை சிறைச்சாலையில் உள்ள தனது மகனுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை, கொனபல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய தாயொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாயார், போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை பார்வையிடுவதற்கு களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தாயார் கொண்டு சென்ற சவர்க்காரத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,300 மில்லி கிராம் ஐஸ் மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சவர்க்காரத்தில் போதைப்பொருள் சிறைச்சாலையிலுள்ள மகனுக்கு கொண்டு சென்ற தாய் கைது களுத்துறை சிறைச்சாலையில் உள்ள தனது மகனுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.ஹொரணை, கொனபல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய தாயொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த தாயார், போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை பார்வையிடுவதற்கு களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தாயார் கொண்டு சென்ற சவர்க்காரத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,300 மில்லி கிராம் ஐஸ் மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement