• Dec 26 2024

நாய்க்கு கொடுத்த உணவால் வந்த விபரீதம் - மகன் தள்ளிவிட்டதில் தாய் உயிரிழப்பு

Chithra / Dec 24th 2024, 2:31 pm
image

 

வீட்டில் நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகன் தாயை தள்ளிவிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம வல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய தீபா மாலா குமாரி விஜேசிங்க என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் 24 வயதுடைய மகன்  கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 20 ஆம் திகதி வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குக் கொடுக்கப்பட்ட உணவைக் கெடுக்கும் விவகாரம் தொடர்பில் தாய்க்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு தாயை மகன் தள்ளிவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தள்ளுமுள்ளு காரணமாக விழுந்ததில் ஏற்பட்ட காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாய்க்கு கொடுத்த உணவால் வந்த விபரீதம் - மகன் தள்ளிவிட்டதில் தாய் உயிரிழப்பு  வீட்டில் நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகன் தாயை தள்ளிவிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.ராகம வல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய தீபா மாலா குமாரி விஜேசிங்க என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் 24 வயதுடைய மகன்  கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 20 ஆம் திகதி வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குக் கொடுக்கப்பட்ட உணவைக் கெடுக்கும் விவகாரம் தொடர்பில் தாய்க்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு தாயை மகன் தள்ளிவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தள்ளுமுள்ளு காரணமாக விழுந்ததில் ஏற்பட்ட காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement