• Nov 26 2024

மாமியாரை மூர்க்கத்தனமாக வெட்டி படுகொலை செய்த மருமகள் - குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து கொடூரம்

Chithra / Jul 8th 2024, 8:28 am
image

 

கம்பளை - ஹெட்காலை பகுதியில் வயோதிப மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தனது குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பெண்ணொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று  இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உலப்பனை தோட்டத்தில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான ஜோதி என்ற 78 வயதுடைய வயோதிப பெண்ணே மருமகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரான குறித்த பெண்,

திருமணம் முடித்து உலப்பனை தோட்டத்தில் வயோதிப மாமியார் மற்றும் தனது 7, 4 வயது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் (06) நள்ளிரவு  இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மூர்க்கத்தனமாக வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய வயோதிபப் பெண்ணை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இரவு 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது சந்தேக நபரான பெண் வீட்டினை மூடிக்கொண்டு தனது குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி பொலிஸாரை நெருங்க விடாமல் தடுத்துள்ளார்.

இந் நிலையில், பொலிஸார் சந்தேக நபரான பெண்ணின் கணவருடன் தொடர்புகொண்டு பெண்ணை நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

மேற்படி, கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் காந்திலதா மேற்கொண்டுள்ளதுடன் ஹெட்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மாமியாரை மூர்க்கத்தனமாக வெட்டி படுகொலை செய்த மருமகள் - குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து கொடூரம்  கம்பளை - ஹெட்காலை பகுதியில் வயோதிப மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தனது குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பெண்ணொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்று  இடம்பெற்றுள்ளது.இதன்போது, உலப்பனை தோட்டத்தில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான ஜோதி என்ற 78 வயதுடைய வயோதிப பெண்ணே மருமகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரான குறித்த பெண்,திருமணம் முடித்து உலப்பனை தோட்டத்தில் வயோதிப மாமியார் மற்றும் தனது 7, 4 வயது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேற்படி கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் (06) நள்ளிரவு  இடம்பெற்றதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தில் மூர்க்கத்தனமாக வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய வயோதிபப் பெண்ணை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.இதனையடுத்து, இரவு 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது சந்தேக நபரான பெண் வீட்டினை மூடிக்கொண்டு தனது குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி பொலிஸாரை நெருங்க விடாமல் தடுத்துள்ளார்.இந் நிலையில், பொலிஸார் சந்தேக நபரான பெண்ணின் கணவருடன் தொடர்புகொண்டு பெண்ணை நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.மேற்படி, கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் காந்திலதா மேற்கொண்டுள்ளதுடன் ஹெட்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement