• Jan 16 2026

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு; பருத்தித்துறையில் துயரம்!

Chithra / Dec 11th 2025, 11:52 am
image

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

43 வயதான ஆசிரியையான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் காயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சடலம் கூற்றுச் சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு; பருத்தித்துறையில் துயரம் யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.43 வயதான ஆசிரியையான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் காயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.சடலம் கூற்றுச் சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில்  வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement