யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
ஊர்க்காவல்துறை - புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவம்பர் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 18ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது மகனும் வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் 22ஆம் திகதி அங்கிருந்து மீண்டும் தமது வீடு நோக்கி வந்தனர்.
இதன்போது வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இருவரும் வழிபட்டுவிட்டு பாதசாரி கடவையூடாக வீதியை கடந்தனர். இதன்போது நெல்லியடி பகுதியில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது.
பின்னர் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
யாழில் வீதியை கடந்த பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள் - சிகிச்சை பலனின்றி பலி யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை - புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவம்பர் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 18ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது மகனும் வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் 22ஆம் திகதி அங்கிருந்து மீண்டும் தமது வீடு நோக்கி வந்தனர்.இதன்போது வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இருவரும் வழிபட்டுவிட்டு பாதசாரி கடவையூடாக வீதியை கடந்தனர். இதன்போது நெல்லியடி பகுதியில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது.பின்னர் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.