• Apr 19 2026

கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இளைஞன் பலி

Chithra / Feb 25th 2026, 6:40 pm
image


அநுராதபுரம் - மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாளுவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.


மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் சீப்புக்குளம் - கலன்பிந்துனுவெவ வீதியின் பாளுவெவ பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


சீப்புக்குளம் பகுதியிலிருந்து கலன்பிந்துனுவெவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.


இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியும், பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றவரும் பலத்த காயமடைந்த நிலையில் தம்மன்னாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 


எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.


விபத்தில் உயிரிழந்தவர் மிஹிந்தலை, சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


காயமடைந்த மற்றைய நபருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இளைஞன் பலி அநுராதபுரம் - மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாளுவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் சீப்புக்குளம் - கலன்பிந்துனுவெவ வீதியின் பாளுவெவ பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சீப்புக்குளம் பகுதியிலிருந்து கலன்பிந்துனுவெவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியும், பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றவரும் பலத்த காயமடைந்த நிலையில் தம்மன்னாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் மிஹிந்தலை, சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த மற்றைய நபருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement