• Jul 03 2024

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; பூந்தொட்டியில் மோதி கோர விபத்து! இருவர் உயிரிழப்பு..!

Chithra / Jul 1st 2024, 3:56 pm
image

Advertisement


குருநாகல் - தம்புள்ளை வீதியில் கலேவெல நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (1) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குருநாகலிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி, பூந்தொட்டியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில்,

தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,  மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காரியமடித்த மற்றும் லக்கல பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களது சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; பூந்தொட்டியில் மோதி கோர விபத்து இருவர் உயிரிழப்பு. குருநாகல் - தம்புள்ளை வீதியில் கலேவெல நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று (1) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.குருநாகலிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி, பூந்தொட்டியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில்,தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,  மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரியமடித்த மற்றும் லக்கல பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களது சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement