• Apr 30 2026

லொறியின் சில்லில் சிக்கி மோட்டார் சைக்கிள் சாரதி பலி; கண்டியில் நடந்த பயங்கர விபத்து

Chithra / Mar 12th 2026, 1:31 pm
image


கண்டி - கலாகா - டெல்தொட பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியின் சில்லில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


டெல்தொட பிரதான வீதியில் உள்ள துஷாரா மல்சலா முன்பாக நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


லொறியை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் சமநிலை இழந்து லொறியின் அருகே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


பின்னர் லொறியின் பின்புற சக்கரத்தில் சிக்கியதால் அவர் படுகாயமடைந்துள்ளார்.


படுகாயமடைந்த நபர் கலாகா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் கண்டி - மகனுவார குதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. 


பிரேதப்  பரிசோதனைக்காக அவரது உடல் பேராதெனியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கலாகா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த விபத்து தொடர்பான சிசிரிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

லொறியின் சில்லில் சிக்கி மோட்டார் சைக்கிள் சாரதி பலி; கண்டியில் நடந்த பயங்கர விபத்து கண்டி - கலாகா - டெல்தொட பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியின் சில்லில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.டெல்தொட பிரதான வீதியில் உள்ள துஷாரா மல்சலா முன்பாக நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.லொறியை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் சமநிலை இழந்து லொறியின் அருகே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் லொறியின் பின்புற சக்கரத்தில் சிக்கியதால் அவர் படுகாயமடைந்துள்ளார்.படுகாயமடைந்த நபர் கலாகா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கண்டி - மகனுவார குதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பிரேதப்  பரிசோதனைக்காக அவரது உடல் பேராதெனியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கலாகா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிரிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement