• May 18 2024

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்...! ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Dec 5th 2023, 10:31 am
image

Advertisement

அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கிளை வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது குறித்த நபரின் மனைவி மற்றும் மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமடைந்து அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த விபத்தில் மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் காயமடைந்து அம்பன்பொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள். ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கிளை வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது குறித்த நபரின் மனைவி மற்றும் மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமடைந்து அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அதேவேளை குறித்த விபத்தில் மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் காயமடைந்து அம்பன்பொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement