• Nov 26 2024

மலைய குயில் அசானிக்கு கனடா நாட்டில் கிடைத்த வாய்ப்பு..! யாழில் அவரே வெளியிட்ட தகவல்

Chithra / Jan 1st 2024, 7:09 am
image

 

ஆரம்பத்தில் மேடையில் போய் பாடும் போது தயக்கம் இருந்தாலும் பின்னர் அனைவரும் எனக்கு ஆதரவு தரும்போது அது எனக்கு பலமாக இருந்தது என அசானி தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

பாடல் துறையில் கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்தது. இனிமேல் அது பற்றிய திட்டங்கள் தெரியவரும்

கில்மிஷாவுடன் பழகும் போது நன்றாக இருக்கும். நன்றாக பழகுவார். மக்களுக்காக வந்திருக்கிறா நல்லா பாடு என கூறுவார்.

எனக்காக பலரும் ஒத்துழைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்.என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் நன்றி.எனக்காக பாராளுமன்றத்தில் பேசியவர்களுக்கு நன்றி – என்றார்.

சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டியில் பங்கேற்ற அசானி, தனக்கு உதவியவர்களுக்கும் ஊடகங்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இதேவேளை யாழ் ஊடக அமையத்தினால் அசானிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இதன்போது அசானியின் பெற்றோரும் உடனிருந்தனர்.

மேலும்  சீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டியின் மேடைக்கே வந்து தனக்கு பத்து இலட்சம் இலங்கை ரூபாவைத் தந்து வாழ்த்திய தியாகி அறக்கொடை நிலைய ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவாவை மரியாதை நிமித்தமாக நன்றி கூறினார்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தியாகி அறக்கொடை நிலையத்தில் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.


மலைய குயில் அசானிக்கு கனடா நாட்டில் கிடைத்த வாய்ப்பு. யாழில் அவரே வெளியிட்ட தகவல்  ஆரம்பத்தில் மேடையில் போய் பாடும் போது தயக்கம் இருந்தாலும் பின்னர் அனைவரும் எனக்கு ஆதரவு தரும்போது அது எனக்கு பலமாக இருந்தது என அசானி தெரிவித்தார்.யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், பாடல் துறையில் கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்தது. இனிமேல் அது பற்றிய திட்டங்கள் தெரியவரும்கில்மிஷாவுடன் பழகும் போது நன்றாக இருக்கும். நன்றாக பழகுவார். மக்களுக்காக வந்திருக்கிறா நல்லா பாடு என கூறுவார்.எனக்காக பலரும் ஒத்துழைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்.என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் நன்றி.எனக்காக பாராளுமன்றத்தில் பேசியவர்களுக்கு நன்றி – என்றார்.சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டியில் பங்கேற்ற அசானி, தனக்கு உதவியவர்களுக்கும் ஊடகங்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.இதேவேளை யாழ் ஊடக அமையத்தினால் அசானிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.இதன்போது அசானியின் பெற்றோரும் உடனிருந்தனர்.மேலும்  சீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டியின் மேடைக்கே வந்து தனக்கு பத்து இலட்சம் இலங்கை ரூபாவைத் தந்து வாழ்த்திய தியாகி அறக்கொடை நிலைய ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவாவை மரியாதை நிமித்தமாக நன்றி கூறினார்.யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தியாகி அறக்கொடை நிலையத்தில் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement