முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தட்டயமலை, பெரிய சாளம்பன் கிராமத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று ( 02)மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார்.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பெரியசாளம்பன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டடதைத் தொடர்ந்து மக்கள் குறைகேள் சந்திப்புக்கள் இடம்பெற்றன.
இதன்போது பெரியசாளம்பன் கிராமத்தின் வீதிகளைச் சீரமைத்தல், பொதுநோக்குமண்டபம் அமைத்தல், குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலுள்ள இடர்பாடுகளைத் தீர்த்தல், முன்பள்ளியிலுள்ள வளப்பற்றாக் குறைகளை சீர்செய்தல், காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்பிற்கு தீர்வினைப் பெற்றுத்தருதல், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் கிராமமக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கோரிக்கைகளை எழுத்து மூலமாக தம்மிடம் கைளிக்குமாறு தெரிவித்ததுடன், மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கவனஞ் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
பெரியசாளம்பன் கிராமத்தில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய எம்.பி ரவிகரன் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தட்டயமலை, பெரிய சாளம்பன் கிராமத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று ( 02)மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார்.அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பெரியசாளம்பன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டடதைத் தொடர்ந்து மக்கள் குறைகேள் சந்திப்புக்கள் இடம்பெற்றன.இதன்போது பெரியசாளம்பன் கிராமத்தின் வீதிகளைச் சீரமைத்தல், பொதுநோக்குமண்டபம் அமைத்தல், குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலுள்ள இடர்பாடுகளைத் தீர்த்தல், முன்பள்ளியிலுள்ள வளப்பற்றாக் குறைகளை சீர்செய்தல், காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்பிற்கு தீர்வினைப் பெற்றுத்தருதல், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டன.இந்நிலையில் கிராமமக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கோரிக்கைகளை எழுத்து மூலமாக தம்மிடம் கைளிக்குமாறு தெரிவித்ததுடன், மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கவனஞ் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.