மூதூர் -கட்டைபறிச்சான் இறால் பாலத்தை ஊடறுத்து சுமார் இரண்டு அடியில் நீர் பிரவாகம் காணப்படுவதால்,
இவ்வீதியூடாக பிரயாணம் செய்யும் மக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பிரயாணம் செய்து வருகின்றனர்.
நாளை (14) பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் இவ் பாலத்தினூடாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வாக்காளர்கள்,
அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டி வருமென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் வாக்களிக்க செல்வதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தோப்பூர்,பள்ளிக்குடியிருப்பு,அம்மன்நகர்,கணேசபுரம் பகுதிகளைச் சேர்ந்தோர் மூதூர் நகருக்குச் செல்வதற்கு கட்டைபறிச்சான் இறால் பாலத்தை கடந்தே நாள்தோறும் பயணித்து வருகின்றனர்.
இவ் ஆபத்தான பாலத்தைக் கடக்கும் போது பல விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மூதூர் -கட்டைபறிச்சான் இறால் பாலத்தை அமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரயாணம் செய்வோரும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மூதூர் -கட்டைபறிச்சான் இறால் பாலத்தை ஊடறுத்து நீர் பிரவாகம் - வீதியூடாக பயணிக்கும் மக்கள் அசௌகரியம் மூதூர் -கட்டைபறிச்சான் இறால் பாலத்தை ஊடறுத்து சுமார் இரண்டு அடியில் நீர் பிரவாகம் காணப்படுவதால், இவ்வீதியூடாக பிரயாணம் செய்யும் மக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பிரயாணம் செய்து வருகின்றனர்.நாளை (14) பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் இவ் பாலத்தினூடாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வாக்காளர்கள், அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டி வருமென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதனால் வாக்களிக்க செல்வதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.தோப்பூர்,பள்ளிக்குடியிருப்பு,அம்மன்நகர்,கணேசபுரம் பகுதிகளைச் சேர்ந்தோர் மூதூர் நகருக்குச் செல்வதற்கு கட்டைபறிச்சான் இறால் பாலத்தை கடந்தே நாள்தோறும் பயணித்து வருகின்றனர்.இவ் ஆபத்தான பாலத்தைக் கடக்கும் போது பல விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மூதூர் -கட்டைபறிச்சான் இறால் பாலத்தை அமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரயாணம் செய்வோரும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.