முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று(10) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாக இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கே முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி அவரது பெயர் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு நேற்று (09) வெளியிட்டிருந்தது.
பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் முஜிபுர் ரஹ்மானிற்கு, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
டயானா கமகேக்கு இந்நாட்டு பாராளுமன்றத்தில் அமர்வதற்கான சட்டத் தகைமை இல்லை என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பொன்றை அறிவித்ததுடன், திருமதி டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன் சத்தியப்பிரமாணம். முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று(10) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாக இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கே முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி அவரது பெயர் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு நேற்று (09) வெளியிட்டிருந்தது.பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் முஜிபுர் ரஹ்மானிற்கு, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.டயானா கமகேக்கு இந்நாட்டு பாராளுமன்றத்தில் அமர்வதற்கான சட்டத் தகைமை இல்லை என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பொன்றை அறிவித்ததுடன், திருமதி டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.