• Apr 21 2026

முல்லை - தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு!

shanu / Apr 21st 2026, 11:42 am
image


முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு, நேற்று  (20.04.2026) குமுழமுனை கமநல சேவை நிலையத்தில் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இடம்பெற்றது.


பொதுச்சபை கூட்டத்தில் பலதரப்பட்ட பிணக்குகளுடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், அவற்றிற்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பான உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து, ஏற்கனவே இருந்த நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.


தண்ணிமுறிப்பு குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் முழுமையாக நிறைவு பெறாத நிலை கருத்தில் கொள்ளப்பட்டு, அவற்றைச் சிறப்பாக முன்னெடுக்கக் கூடியவராக கருதப்பட்ட சௌ.சசிகுமார் மீண்டும் தலைவராக அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.


புதிய நிர்வாகத்தில் செயலாளராக சி. விதுசன், பொருளாளராக க. பிரசாந்தன், உப தலைவராக இ. மயூரன், உப செயலாளராக மு. குகதாஸ், கணக்காய்வாளராக செ. அபிசேகன் உள்ளிட்டோர் தெரிவு செய்யப்பட்டதுடன், மேலும் ஆறு நிர்வாக உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.


சங்கத்தின் நிதி மற்றும் நிர்வாக தொடர்பான பிணக்குகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், கணக்கறிக்கைகளும் சரிவர சமர்ப்பிக்கப்பட்டன. இதன் மூலம் அனைத்து பிரச்சினைகளும் இயல்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் குமுழமுனை பெரும்பாக உத்தியோகத்தர், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லை - தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு, நேற்று  (20.04.2026) குமுழமுனை கமநல சேவை நிலையத்தில் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இடம்பெற்றது.பொதுச்சபை கூட்டத்தில் பலதரப்பட்ட பிணக்குகளுடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், அவற்றிற்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பான உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து, ஏற்கனவே இருந்த நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.தண்ணிமுறிப்பு குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் முழுமையாக நிறைவு பெறாத நிலை கருத்தில் கொள்ளப்பட்டு, அவற்றைச் சிறப்பாக முன்னெடுக்கக் கூடியவராக கருதப்பட்ட சௌ.சசிகுமார் மீண்டும் தலைவராக அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.புதிய நிர்வாகத்தில் செயலாளராக சி. விதுசன், பொருளாளராக க. பிரசாந்தன், உப தலைவராக இ. மயூரன், உப செயலாளராக மு. குகதாஸ், கணக்காய்வாளராக செ. அபிசேகன் உள்ளிட்டோர் தெரிவு செய்யப்பட்டதுடன், மேலும் ஆறு நிர்வாக உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.சங்கத்தின் நிதி மற்றும் நிர்வாக தொடர்பான பிணக்குகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், கணக்கறிக்கைகளும் சரிவர சமர்ப்பிக்கப்பட்டன. இதன் மூலம் அனைத்து பிரச்சினைகளும் இயல்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் குமுழமுனை பெரும்பாக உத்தியோகத்தர், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement