• Jun 24 2024

முல்லை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்...! காணி பிரச்சினை தொடர்பிலும் ஆராய்வு...!

Sharmi / Jun 14th 2024, 12:33 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் (13) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை  9.30 மணி முதல் மாலை 1.45 மணிவரை, மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்  ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும்  விவசாயம்   ,காணி, மகாவலி அதிகாரசபை, வனவளத் திணைக்களம்  , நன்னீர் மீன்பிடி ,  கடற்தொழில் மற்றும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் முதன்மையாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

இந் நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன்,  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகநாதலிங்கம், முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் குணபாலன், வடமாகாண திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள்,பொலிஸ் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




முல்லை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம். காணி பிரச்சினை தொடர்பிலும் ஆராய்வு. முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் (13) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை  9.30 மணி முதல் மாலை 1.45 மணிவரை, மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்  ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும்  விவசாயம்   ,காணி, மகாவலி அதிகாரசபை, வனவளத் திணைக்களம்  , நன்னீர் மீன்பிடி ,  கடற்தொழில் மற்றும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் முதன்மையாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இந் நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன்,  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகநாதலிங்கம், முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் குணபாலன், வடமாகாண திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள்,பொலிஸ் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement