கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 80க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் இருவர் கைகு செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
ஓமந்தை பொலிஸாருக்கு நேற்றைய தினம்(13) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட சோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது A9 வீதியூடாக பயணித்த இரண்டு வாகனங்களை சோதனை இடுவதற்காக பொலிஸாரால் வழிமறித்த நிலையில் குறித்த வாகனம் தப்பிச் செல்ல முற்பட்டது.
இந்நிலையில் குறித்த வாகனத்தை துரத்திச் சென்று வாகனத்தை மறித்து சோதனை செய்த பொலிஸார், வாகனத்தில் சட்டத்திற்கு முரணாக கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகளை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை மற்றுமொரு வாகனத்தை சோதனை செய்ததில் முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்படவிருந்த 18 மாடுகளுடன் கூடிய வாகனத்தையும் மீட்டதுடன் அதிலும் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்
இவ்விரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட நபர்களை விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா ஊடாக தென்னிலங்கைக்கு கடத்தப்படவிருந்த கால்நடைகள். நால்வர் கைது. கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 80க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் இருவர் கைகு செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஓமந்தை பொலிஸாருக்கு நேற்றைய தினம்(13) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட சோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.இதன்போது A9 வீதியூடாக பயணித்த இரண்டு வாகனங்களை சோதனை இடுவதற்காக பொலிஸாரால் வழிமறித்த நிலையில் குறித்த வாகனம் தப்பிச் செல்ல முற்பட்டது.இந்நிலையில் குறித்த வாகனத்தை துரத்திச் சென்று வாகனத்தை மறித்து சோதனை செய்த பொலிஸார், வாகனத்தில் சட்டத்திற்கு முரணாக கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகளை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.இதேவேளை மற்றுமொரு வாகனத்தை சோதனை செய்ததில் முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்படவிருந்த 18 மாடுகளுடன் கூடிய வாகனத்தையும் மீட்டதுடன் அதிலும் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்இவ்விரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட நபர்களை விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.