• Nov 28 2024

முல்லைத்தீவில் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் இன்று ஆரம்பம்..!

Sharmi / Jul 18th 2024, 2:09 pm
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு ஏற்ப ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான நிகழ்வு இன்று(18) காலை இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 472 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம்(18) காலை 9 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமிய பொருளாதார  இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கலந்து சிறப்பித்தார்.

 முல்லைத்தீவு மாவட்டத்தின்  முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 472 மாணவர்களும் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட 450 மாணவர்களுக்கும் மொத்தமாக 922 மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்குமாகாண ஆளுநரின் செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் பிரதி முகாமையாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள்,மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


முல்லைத்தீவில் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் இன்று ஆரம்பம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு ஏற்ப ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான நிகழ்வு இன்று(18) காலை இடம்பெற்றதுமுல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 472 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம்(18) காலை 9 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமிய பொருளாதார  இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கலந்து சிறப்பித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின்  முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 472 மாணவர்களும் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட 450 மாணவர்களுக்கும் மொத்தமாக 922 மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதுஇந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்குமாகாண ஆளுநரின் செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் பிரதி முகாமையாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள்,மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement