• May 15 2024

வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் சாதனை...! குவியும் பாராட்டு...!

Sharmi / Apr 29th 2024, 3:26 pm
image

Advertisement

வட மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் யாழ் மந்திகையில் நடத்தப்பட்ட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் தொடர்ந்து 5வது தடவையாக 1இடத்தை பெற்றுக் கொண்டனர். 

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் நேற்றுமுன்தினம்(27) யாழ் மந்திகையில் நடாத்தப்பட்ட  வடமாகாணமட்ட  திறந்த(open) மல்யுத்த (wrestling)  போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட , ஆண்கள் அணியினரும், பெண்கள் அணியினரும் முதலிடம் பெற்றுள்ளனர். அத்துடன் தொடர்ந்து ஐந்து வருடங்களாக மாகாணமட்ட திறந்த(open) மல்யுத்த(wrestling) போட்டியில்  முல்லைத்தீவு மாவட்டம் முதலிடம் பெற்றிருந்தார்கள்.

இப் போட்டியில், ஆண்கள் அணியில் 6தங்கம் 6 வெள்ளி 3வெண்கலப் பதக்கங்களை பெற்று முதலாம் இடத்தினை முல்லைத்தீவு  மாவட்ட அணியினரும்

2 தங்கம் 2 வெண்கலம் 4 வெள்ளிப் பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தினை யாழ் மாவட்ட அணியினரும்

1தங்கம் 1வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தினை யாழ் மாவட்ட அணியினரும்

பெண்கள் பிரிவில் 10 தங்கம் 8 வெண்கலப் பதங்களைப் பெற்று முல்லைத்தீவு  மாவட்ட  பெண்கள் அணியினர் முதலாம் இடத்தினையும் சுவீகரித்துக்கொண்டனர்.

மேற்படி, முல்லைத்தீவு மாவட்ட அணி வீரர்களாக உடையார்கட்டு, வள்ளிபுனம்,  தீர்த்தகரை, மாஞ்சோலை, குமுழமுனை, சிலாவத்தை, கொக்குதொடுவாய், தண்ணீரூற்று, முள்ளியவளை, மாமூலை, தண்டுவான் ,பழம்பாசி,  மாங்குளம், பாலிநகர் ஆகிய பிரதேச வீர வீராங்கனைகள் மேற்படி மல்யுத்த போட்டியில் பங்குகொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் வெற்றிக்காக பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் சாதனை. குவியும் பாராட்டு. வட மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் யாழ் மந்திகையில் நடத்தப்பட்ட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் தொடர்ந்து 5வது தடவையாக 1இடத்தை பெற்றுக் கொண்டனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் நேற்றுமுன்தினம்(27) யாழ் மந்திகையில் நடாத்தப்பட்ட  வடமாகாணமட்ட  திறந்த(open) மல்யுத்த (wrestling)  போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட , ஆண்கள் அணியினரும், பெண்கள் அணியினரும் முதலிடம் பெற்றுள்ளனர். அத்துடன் தொடர்ந்து ஐந்து வருடங்களாக மாகாணமட்ட திறந்த(open) மல்யுத்த(wrestling) போட்டியில்  முல்லைத்தீவு மாவட்டம் முதலிடம் பெற்றிருந்தார்கள்.இப் போட்டியில், ஆண்கள் அணியில் 6தங்கம் 6 வெள்ளி 3வெண்கலப் பதக்கங்களை பெற்று முதலாம் இடத்தினை முல்லைத்தீவு  மாவட்ட அணியினரும்2 தங்கம் 2 வெண்கலம் 4 வெள்ளிப் பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தினை யாழ் மாவட்ட அணியினரும்1தங்கம் 1வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தினை யாழ் மாவட்ட அணியினரும்பெண்கள் பிரிவில் 10 தங்கம் 8 வெண்கலப் பதங்களைப் பெற்று முல்லைத்தீவு  மாவட்ட  பெண்கள் அணியினர் முதலாம் இடத்தினையும் சுவீகரித்துக்கொண்டனர்.மேற்படி, முல்லைத்தீவு மாவட்ட அணி வீரர்களாக உடையார்கட்டு, வள்ளிபுனம்,  தீர்த்தகரை, மாஞ்சோலை, குமுழமுனை, சிலாவத்தை, கொக்குதொடுவாய், தண்ணீரூற்று, முள்ளியவளை, மாமூலை, தண்டுவான் ,பழம்பாசி,  மாங்குளம், பாலிநகர் ஆகிய பிரதேச வீர வீராங்கனைகள் மேற்படி மல்யுத்த போட்டியில் பங்குகொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் வெற்றிக்காக பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement