• Sep 19 2024

உலக சாதனைக்கு தயாராகும் இலங்கைப் பெண்கள்; ஒன்றுகூடும் 250 இற்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்கள்!

Chithra / May 15th 2024, 12:32 pm
image

Advertisement



நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா" (Makeup Artist clup of lanka) மூலம் பல்வேறு உதவிகளை செய்யவுள்ளதாக அதன் தலைவி திருமதி அனூஷா குமரேசன் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 4, பம்பலப்பட்டி லோரன்ஸ் ரோட் "AVS டவரில்"  (14) நடைபெற்றது.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் லங்கா மூலமாக சர்வதேச விருதுகளை வென்ற 9 பெண் ஒப்பனை கலைஞர்களும் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இதே நேரம் எதிர்வரும் ஜூலை மாதம் 21ம் திகதி கொழும்பில் 250 இற்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து அவர்களின் ஒப்பனை கலைத்திறமைகளை வெளிக்காட்டி உலக சாதனையொன்றை நிலை நாட்டவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


உலக சாதனைக்கு தயாராகும் இலங்கைப் பெண்கள்; ஒன்றுகூடும் 250 இற்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்கள் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா" (Makeup Artist clup of lanka) மூலம் பல்வேறு உதவிகளை செய்யவுள்ளதாக அதன் தலைவி திருமதி அனூஷா குமரேசன் தெரிவித்தார்.இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 4, பம்பலப்பட்டி லோரன்ஸ் ரோட் "AVS டவரில்"  (14) நடைபெற்றது.இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் லங்கா மூலமாக சர்வதேச விருதுகளை வென்ற 9 பெண் ஒப்பனை கலைஞர்களும் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.இதே நேரம் எதிர்வரும் ஜூலை மாதம் 21ம் திகதி கொழும்பில் 250 இற்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து அவர்களின் ஒப்பனை கலைத்திறமைகளை வெளிக்காட்டி உலக சாதனையொன்றை நிலை நாட்டவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement