இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டதுடன் ,முள்ளிவாய்க்கால் படுகொலையினை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
வாகரை புச்சாங்கேணியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டதுடன் ,முள்ளிவாய்க்கால் படுகொலையினை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.