• Jun 26 2026

கொழும்பில் வீடற்ற மக்களுக்கு நற்செய்தி: கொலன்னாவையில் 624 அடுக்குமாடி குடியிருப்புகள் தயார்!

Chithra / Jun 26th 2026, 3:45 pm
image


கொழும்பு - கொலன்னாவ பகுதியில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் வீடற்ற மக்களுக்காகக் கட்டப்பட்டு வந்த 624 வீடமைப்பு அலகுகளைக் கொண்ட 12 மாடி பிரம்மாண்ட வீடமைப்பு வளாகத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.


ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) நிதியுதவியுடன், சுமார் 5,784 மில்லியன் ரூபா பெரும் செலவில் இந்த நவீன அடுக்குமாடி வீடமைப்பு வளாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த புதிய வீடமைப்பு அலகுகளை தகுதியுடைய மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்கான அனைத்து இறுதி கட்ட ஏற்பாடுகளும் தற்போது அமைச்சினால் இறுதி செய்யப்பட்டுள்ளன.


முன்னதாக, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்து, குடியிருப்புகளின் தரம் மற்றும் இறுதி கட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.


இந்தத் திட்டத்தின் மூலம் கொழும்பு நகரில் நீண்டகாலமாக நிலவி வந்த வீடற்றோருக்கான பிரச்சினைக்கு பெருமளவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் வீடற்ற மக்களுக்கு நற்செய்தி: கொலன்னாவையில் 624 அடுக்குமாடி குடியிருப்புகள் தயார் கொழும்பு - கொலன்னாவ பகுதியில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் வீடற்ற மக்களுக்காகக் கட்டப்பட்டு வந்த 624 வீடமைப்பு அலகுகளைக் கொண்ட 12 மாடி பிரம்மாண்ட வீடமைப்பு வளாகத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) நிதியுதவியுடன், சுமார் 5,784 மில்லியன் ரூபா பெரும் செலவில் இந்த நவீன அடுக்குமாடி வீடமைப்பு வளாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த புதிய வீடமைப்பு அலகுகளை தகுதியுடைய மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்கான அனைத்து இறுதி கட்ட ஏற்பாடுகளும் தற்போது அமைச்சினால் இறுதி செய்யப்பட்டுள்ளன.முன்னதாக, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்து, குடியிருப்புகளின் தரம் மற்றும் இறுதி கட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.இந்தத் திட்டத்தின் மூலம் கொழும்பு நகரில் நீண்டகாலமாக நிலவி வந்த வீடற்றோருக்கான பிரச்சினைக்கு பெருமளவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement