• Jun 26 2026

சூரியசக்தி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்; நிலுவைத் தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் விவாதம்

Chithra / Jun 26th 2026, 3:32 pm
image


நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அரசாங்கம் மந்தமான போக்கைக் கடைப்பிடித்து வருவதால், சூரியசக்தித் துறையில் இயங்கும் பல நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


சூரியசக்தித் துறையில் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வந்த நிலையில், அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளால் அந்தத் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும், 2030ஆம் ஆண்டுக்கான நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்திடம் தெளிவான திட்டமிடல் மற்றும் செயல் வரைபடம் இல்லை என்றும், எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்புகள் காரணமாகத் துறை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.


இதற்கு பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க, சூரியசக்தி உற்பத்தியை மட்டும் அதிகரிப்பது போதுமானதல்ல என்றும், மின்சார விநியோகக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.


மின் தேவை குறைவாக இருக்கும் காலங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அதிகரிப்பது மின் கட்டமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


அத்துடன், தயாசிறி ஜெயசேகர முன்வைத்துள்ள புள்ளிவிவரங்கள் தவறானவை என்றும், ஆதாரங்களுடன் கூடிய தகவல்களை மட்டுமே முன்வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.


இதேவேளை, சூரியசக்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் சுமார் 459 நிறுவனங்களுக்கு கடந்த சில மாதங்களாக நிலுவைத் தொகைகள் வழங்கப்படாததால் அவை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் சுட்டிக்காட்டினார்.


இதற்கு பதிலளித்த அமைச்சர் அநுர கருணாதிலக்க, நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதற்குத் தேவையான 15 பில்லியன் ரூபா நிதி திறைசேரியிடமிருந்து கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.


அமைச்சரவையின் வழிகாட்டலின்படி, சூரியசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளும் அடுத்த ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். 

சூரியசக்தி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்; நிலுவைத் தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் விவாதம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அரசாங்கம் மந்தமான போக்கைக் கடைப்பிடித்து வருவதால், சூரியசக்தித் துறையில் இயங்கும் பல நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.சூரியசக்தித் துறையில் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வந்த நிலையில், அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளால் அந்தத் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், 2030ஆம் ஆண்டுக்கான நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்திடம் தெளிவான திட்டமிடல் மற்றும் செயல் வரைபடம் இல்லை என்றும், எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்புகள் காரணமாகத் துறை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.இதற்கு பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க, சூரியசக்தி உற்பத்தியை மட்டும் அதிகரிப்பது போதுமானதல்ல என்றும், மின்சார விநியோகக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.மின் தேவை குறைவாக இருக்கும் காலங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அதிகரிப்பது மின் கட்டமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன், தயாசிறி ஜெயசேகர முன்வைத்துள்ள புள்ளிவிவரங்கள் தவறானவை என்றும், ஆதாரங்களுடன் கூடிய தகவல்களை மட்டுமே முன்வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.இதேவேளை, சூரியசக்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் சுமார் 459 நிறுவனங்களுக்கு கடந்த சில மாதங்களாக நிலுவைத் தொகைகள் வழங்கப்படாததால் அவை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் சுட்டிக்காட்டினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் அநுர கருணாதிலக்க, நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதற்குத் தேவையான 15 பில்லியன் ரூபா நிதி திறைசேரியிடமிருந்து கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.அமைச்சரவையின் வழிகாட்டலின்படி, சூரியசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளும் அடுத்த ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். 

Advertisement

Advertisement

Advertisement