முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பாடசாலை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பாடசாலை வாயில் முன்பாக பெற்றோர்கள் இன்றையதினம் காலை 7 மணியளவில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ்கலவன் வித்தியாலயத்திற்கு கடந்த 8 மாதங்களாக அதிபர் இல்லாமலே இயங்கி வருகின்றது.
இப்பாடசாலையில் 57 மாணவர்கள் கற்கின்றனர்.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு கல்வி சரியாக கிடைக்கவில்லை எனவும்,
இது தொடர்பாக வலயக்கல்வி பணிமனையில் முறையிட்டிருந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்,
நிலையாக அதிபரை நியமிக்குமாறும், அதனை எழுத்து வடிவில் ஆவணமாக தரும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி பாடசாலை வாயிலை மறித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் பெற்றோருடன் கலந்துரையாடி வீதியில் நின்ற ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுப்பியிருந்தனர்.
அதனையடுத்து பெற்றோருக்கும், பொலிஸாருக்கும் இடையில் குறித்த பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த வலயக்கல்வி பணிப்பாளர் இ.தமிழ்மாறன், பொலிஸார், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் பாடசாலை வளாகத்திற்குள் குறிப்பிட்ட சிலருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
அதில் வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவிக்கையில்,
எழுத்து மூலமான உறுதிமொழி தரமுடியாது, கிழக்கு முள்ளிவாய்க்கால் பாடசாலைக்கு அதிபர்கள் வர விருப்பம் இன்மை காரணமாகவும் அதிபர் ஒருவரை நியமிக்க முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி போராட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பாடசாலை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பாடசாலை வாயில் முன்பாக பெற்றோர்கள் இன்றையதினம் காலை 7 மணியளவில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ்கலவன் வித்தியாலயத்திற்கு கடந்த 8 மாதங்களாக அதிபர் இல்லாமலே இயங்கி வருகின்றது. இப்பாடசாலையில் 57 மாணவர்கள் கற்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு கல்வி சரியாக கிடைக்கவில்லை எனவும், இது தொடர்பாக வலயக்கல்வி பணிமனையில் முறையிட்டிருந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், நிலையாக அதிபரை நியமிக்குமாறும், அதனை எழுத்து வடிவில் ஆவணமாக தரும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி பாடசாலை வாயிலை மறித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் பெற்றோருடன் கலந்துரையாடி வீதியில் நின்ற ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுப்பியிருந்தனர். அதனையடுத்து பெற்றோருக்கும், பொலிஸாருக்கும் இடையில் குறித்த பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.இதனையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த வலயக்கல்வி பணிப்பாளர் இ.தமிழ்மாறன், பொலிஸார், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் பாடசாலை வளாகத்திற்குள் குறிப்பிட்ட சிலருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அதில் வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவிக்கையில், எழுத்து மூலமான உறுதிமொழி தரமுடியாது, கிழக்கு முள்ளிவாய்க்கால் பாடசாலைக்கு அதிபர்கள் வர விருப்பம் இன்மை காரணமாகவும் அதிபர் ஒருவரை நியமிக்க முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.