• Jan 19 2025

பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் - ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

Tamil nila / Dec 17th 2024, 8:51 pm
image

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். 

பாராளுமன்றில் இன்று சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்புதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

2024 நவம்பர் 27நாளில் எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச்செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். 

அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

இலங்கைத்தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில்டிக்கமுடியாத துன்பத்தை அனுபவித்து இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர். 

இறுதிப்போரின் வலிகள் இன்னும் ஆறாத நிலையில் அப்போரில் தமது உறவுகளை இழந்த ஏராளமான மக்கள் இன்னும் தம் உணர்வுகளுடன் நடைபிணங்களாக வாழ்ந்துவருகின்றனர். 

தம்மை யாராவது காப்பாற்றமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் சின்னஞ்சிறியவர்கள் முதல், பெரியவர்கள்வரை ஏங்கித்தவித்த நிலை,  "பசி, பசி" எனக் குழந்தைகள் அழும்போது செய்வதறியாதநிலையில் பெற்றோர்கள் கலங்கிய அவலநிலை, பதுங்குகுழிகளைவிட்டு வெளியேவந்தால் தப்பமுடியாது என்றெண்ணி பதுங்குகுழிகளுக்குள்ளேயே தங்கியிருந்தநேரம் அதற்குள்ளேயும் குண்டுகள் விழுந்து உறவுகள் மடிந்தபோது உயிரிழந்த தமது உறவுகளைப் புதைப்பதற்கு இயலாமல் உடலங்களை அவ்வாறே விட்டு ஓடிய நிலமைகள், ஆகியவற்றை எண்ணிப்பாருங்கள். 

இலட்சக்கணக்கில் தமிழ் உறவுகளைப்பலிகொண்ட அந்தப் பேரவலம், தமிழ்த்தேசிய இனத்தின் கூட்டு மன உளவியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

இந்தநிலையில் அங்கு உறவுகளை இழந்து, தற்போது வாழ்ந்துவருகின்ற மக்கள் தம் உறவுகளை நினைவுகூர்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நினைவிடம் தேவை என்பதை அங்குள்ள மக்கள் ஆதங்கத்துடன் கூறிவருகின்றனர். 

உயிரிழந்தோரை நினைவுகொள்ளும் விதத்தில் உலகின் மூத்தகுடிகளில் ஒன்றான தமிழ் இனம், மிக உயர் நாகரீக பண்பாடுகளைக்கொண்டுள்ளது. எம் இன வரலாற்றில் மிக அதிகமான மக்கள் உயிரிழந்த ஒரு அவலம். இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர ஒரு நினைவாலயம் அமைக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது. 

ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கென முல்லைத்தீவில் மட்டுமல்ல, பல இடங்களில் நினைவுமண்டபம் அமைக்கப்பட்டு அதில் உயிரிழந்த ஒவ்வொருவருடையபெயரும் குறிக்கப்பட்டுள்ளது. 

இது காலாகாலத்திற்கும் உயிரிழந்தோரின் உறவுகளையும், சந்ததியினரையும் நினைவுகூர வழிசமைக்கின்றது. 

அதேபோன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாகக் கட்டப்படும் ஆலயத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்படுவது தத்தமது உறவுகளை காலாகாலத்திற்கும் அவர்களின் சந்ததிகள் நினைவுகூர வசதியாக இருக்கும். எம் இனத்தின் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகஅமையும். 

அந்தவகையில் தேசிய பேரவலத்தின் சாட்சியாக நினைவு ஆலயம் முள்ளிவாய்க்காலில் மே -18 நினைவுகூருமிடத்தில் அமைக்கப்படவேண்டும். 

இறந்தவர்களை நாங்கள் அடக்கம்செய்யும்போது கல்லறைகளை அதன்மேல் அமைக்கின்றோம். அந்தக்கல்லறைகளில் சம்பந்தப்பட்ட உறவுகள், நினைவுதினங்களில் பால்தெளித்து, படையல்களைப் படைத்து, பூக்கள் சொரிந்து, தீபங்கள் ஏற்றி தங்களுடைய மனக்கவலையை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தி அழுது ஆற்றுகின்ற அந்த நிலைக்கு எமது மக்களையும் ஈடுபடுவதற்கு ஒரு நினைவாலயத்தை அமைப்பதற்கு எமது மக்களுக்கு அனுமதிதாருங்கள். 

இனப்பாகுபாடு பாராது, நாம் முள்ளிவாய்க்காலில் ஓர் நினைவாலயம் அமைப்பதற்கு அனுமதிதாருங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.


பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் - ரவிகரன் எம்.பி வலியுறுத்து முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்புதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27நாளில் எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச்செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கைத்தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில்டிக்கமுடியாத துன்பத்தை அனுபவித்து இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர். இறுதிப்போரின் வலிகள் இன்னும் ஆறாத நிலையில் அப்போரில் தமது உறவுகளை இழந்த ஏராளமான மக்கள் இன்னும் தம் உணர்வுகளுடன் நடைபிணங்களாக வாழ்ந்துவருகின்றனர். தம்மை யாராவது காப்பாற்றமாட்டார்களா என்ற ஏக்கத்தில் சின்னஞ்சிறியவர்கள் முதல், பெரியவர்கள்வரை ஏங்கித்தவித்த நிலை,  "பசி, பசி" எனக் குழந்தைகள் அழும்போது செய்வதறியாதநிலையில் பெற்றோர்கள் கலங்கிய அவலநிலை, பதுங்குகுழிகளைவிட்டு வெளியேவந்தால் தப்பமுடியாது என்றெண்ணி பதுங்குகுழிகளுக்குள்ளேயே தங்கியிருந்தநேரம் அதற்குள்ளேயும் குண்டுகள் விழுந்து உறவுகள் மடிந்தபோது உயிரிழந்த தமது உறவுகளைப் புதைப்பதற்கு இயலாமல் உடலங்களை அவ்வாறே விட்டு ஓடிய நிலமைகள், ஆகியவற்றை எண்ணிப்பாருங்கள். இலட்சக்கணக்கில் தமிழ் உறவுகளைப்பலிகொண்ட அந்தப் பேரவலம், தமிழ்த்தேசிய இனத்தின் கூட்டு மன உளவியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தநிலையில் அங்கு உறவுகளை இழந்து, தற்போது வாழ்ந்துவருகின்ற மக்கள் தம் உறவுகளை நினைவுகூர்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நினைவிடம் தேவை என்பதை அங்குள்ள மக்கள் ஆதங்கத்துடன் கூறிவருகின்றனர். உயிரிழந்தோரை நினைவுகொள்ளும் விதத்தில் உலகின் மூத்தகுடிகளில் ஒன்றான தமிழ் இனம், மிக உயர் நாகரீக பண்பாடுகளைக்கொண்டுள்ளது. எம் இன வரலாற்றில் மிக அதிகமான மக்கள் உயிரிழந்த ஒரு அவலம். இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர ஒரு நினைவாலயம் அமைக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது. ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கென முல்லைத்தீவில் மட்டுமல்ல, பல இடங்களில் நினைவுமண்டபம் அமைக்கப்பட்டு அதில் உயிரிழந்த ஒவ்வொருவருடையபெயரும் குறிக்கப்பட்டுள்ளது. இது காலாகாலத்திற்கும் உயிரிழந்தோரின் உறவுகளையும், சந்ததியினரையும் நினைவுகூர வழிசமைக்கின்றது. அதேபோன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாகக் கட்டப்படும் ஆலயத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்படுவது தத்தமது உறவுகளை காலாகாலத்திற்கும் அவர்களின் சந்ததிகள் நினைவுகூர வசதியாக இருக்கும். எம் இனத்தின் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகஅமையும். அந்தவகையில் தேசிய பேரவலத்தின் சாட்சியாக நினைவு ஆலயம் முள்ளிவாய்க்காலில் மே -18 நினைவுகூருமிடத்தில் அமைக்கப்படவேண்டும். இறந்தவர்களை நாங்கள் அடக்கம்செய்யும்போது கல்லறைகளை அதன்மேல் அமைக்கின்றோம். அந்தக்கல்லறைகளில் சம்பந்தப்பட்ட உறவுகள், நினைவுதினங்களில் பால்தெளித்து, படையல்களைப் படைத்து, பூக்கள் சொரிந்து, தீபங்கள் ஏற்றி தங்களுடைய மனக்கவலையை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தி அழுது ஆற்றுகின்ற அந்த நிலைக்கு எமது மக்களையும் ஈடுபடுவதற்கு ஒரு நினைவாலயத்தை அமைப்பதற்கு எமது மக்களுக்கு அனுமதிதாருங்கள். இனப்பாகுபாடு பாராது, நாம் முள்ளிவாய்க்காலில் ஓர் நினைவாலயம் அமைப்பதற்கு அனுமதிதாருங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement