வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும்,கண்காட்சியும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிழக்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மற்றும் திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து பண்பாட்டு ஊர்திகள்,கலை ஆற்றுகைகள் பண்பாட்டு பவனியாக விழா மண்டபமான மன்னார் நகர சபை மண்டபம் நோக்கி வருகை தந்தது.
அதனைத் தொடர்ந்து வருகை தந்த விருந்தினர்களினால் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, பார்வையிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டு பெருவிழா நிகழ்வு கலைத் தவசி கலைஞர் செ.செபமாலை அரங்கில் தமிழ்த்தாய்க்கு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மலர் மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .
அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து,மங்கள இசை,வரவேற்பு நடனம்,நடன நிகழ்வு,இசை நிகழ்வு,கண்டிய நடனம்,றபான் நடனம்,உழவர் நடனம்,வாழ் நடனம் ஆகியவை இடம் பெற்றது.அதனை தொடர்ந்து வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழாவையொட்டி வடந்தை-2024 எனும் நூல் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலைக்குரிசில் விருது வழங்குதல்,2023 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான பரிசு வழங்குதல் மற்றும் இளங்கலைஞர் விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்வுகள் அரங்கேற்ற பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும்,கண்காட்சியும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றதுவடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிழக்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மற்றும் திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து பண்பாட்டு ஊர்திகள்,கலை ஆற்றுகைகள் பண்பாட்டு பவனியாக விழா மண்டபமான மன்னார் நகர சபை மண்டபம் நோக்கி வருகை தந்தது.அதனைத் தொடர்ந்து வருகை தந்த விருந்தினர்களினால் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, பார்வையிடப்பட்டது.அதனைத்தொடர்ந்து வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டு பெருவிழா நிகழ்வு கலைத் தவசி கலைஞர் செ.செபமாலை அரங்கில் தமிழ்த்தாய்க்கு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மலர் மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து,மங்கள இசை,வரவேற்பு நடனம்,நடன நிகழ்வு,இசை நிகழ்வு,கண்டிய நடனம்,றபான் நடனம்,உழவர் நடனம்,வாழ் நடனம் ஆகியவை இடம் பெற்றது.அதனை தொடர்ந்து வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழாவையொட்டி வடந்தை-2024 எனும் நூல் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து கலைக்குரிசில் விருது வழங்குதல்,2023 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான பரிசு வழங்குதல் மற்றும் இளங்கலைஞர் விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்வுகள் அரங்கேற்ற பட்டமையும் குறிப்பிடத்தக்கது.