• Dec 09 2024

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டும்- மல்லாவியில் பாரிய போராட்டம்

Sharmi / Aug 16th 2024, 3:09 pm
image

கனடா செல்ல தயாரான நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி அன்று காணாமல் போன நிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட மல்லாவி யோகபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள்,பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றையதினம்(16) காலை முன்னெடுத்தனர்.

19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் , பொலிசாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும் ,துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இன்று குறித்த போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்தது

மல்லாவி மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி மல்லாவி போலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்று கூடி , "சஜீவன் மரணத்திற்கு நீதி வேண்டும்" , "கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து" , "விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா" , "எமது நண்பனின் மரணத்திற்கு நீதி வேண்டும்" , "வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா", "எமது பிள்ளைக்கு நீதி வேண்டும் " போன்ற எதிர்ப்பு சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கோஷமிட்டனர் 

குறித்த போராட்த்திற்கு ஆதரவாக இன்றைய தினம்(16)  மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை , சம்பவ இடத்திற்கு வருகை தந்த மல்லாவி போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் , இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டிருந்தவர்களிடம் தெரிவித்திருந்தார்

 குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாவிடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றினை தாம் மேற்கொள்வோம் என்றும் , சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து,போலிஸ் பொறுப்பதிகாரியிடமும் , வருகை தந்திருந்த பாராளுமன்ற அரசியல் பிரமுகர்களிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது,

இதேவேளை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டும்- மல்லாவியில் பாரிய போராட்டம் கனடா செல்ல தயாரான நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி அன்று காணாமல் போன நிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட மல்லாவி யோகபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள்,பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றையதினம்(16) காலை முன்னெடுத்தனர்.19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் , பொலிசாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும் ,துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இன்று குறித்த போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்ததுமல்லாவி மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி மல்லாவி போலிஸ் நிலையம் வரை சென்றிருந்ததுபின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்று கூடி , "சஜீவன் மரணத்திற்கு நீதி வேண்டும்" , "கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து" , "விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா" , "எமது நண்பனின் மரணத்திற்கு நீதி வேண்டும்" , "வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா", "எமது பிள்ளைக்கு நீதி வேண்டும் " போன்ற எதிர்ப்பு சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கோஷமிட்டனர் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம்(16)  மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்ததுஇதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை , சம்பவ இடத்திற்கு வருகை தந்த மல்லாவி போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் , இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டிருந்தவர்களிடம் தெரிவித்திருந்தார் குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாவிடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றினை தாம் மேற்கொள்வோம் என்றும் , சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து,போலிஸ் பொறுப்பதிகாரியிடமும் , வருகை தந்திருந்த பாராளுமன்ற அரசியல் பிரமுகர்களிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது,இதேவேளை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement