• Sep 20 2024

உள்ளாடைகளுடன் அலையும் முறிகண்டி காவலறண் பொலிசார் - தமிழ் உத்தியோகத்தரின் நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள்! பிரதி பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு samugammedia

Chithra / Jul 4th 2023, 3:18 pm
image

Advertisement

முறிகண்டி பொலிஸ் காவலறண்  பொதுமக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதில்லை என பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் மக்களின் பாதுகாப்பு சேவையை உறுதி செய்வதற்காகவும், இலகுபடுத்தலிற்காகவும் முறிகண்டியில் பொலிஸ் காவலரண் 28.12.2021 அன்று தறந்து வைக்கப்பட்டது.

குறித்த காவலரணில் மக்கள் முறைப்பாடுகள் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் பொது மகன் ஒருவர் சேவை பெறுவதற்கான சென்றபொழுது குறித்த காவலரணில் எவரும் இருந்திருக்கவில்லை. 

காவல் கடமையில் எவரும் இல்லாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காவலரணில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஓவ்வு உடையில் சாரத்துடன் இருந்ததுடன், தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் நீராடிவிட்டு மாற்றுடையில் இருந்துள்ளார்.

சேவைக்கு சென்ற நபர் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தமிழ் உத்தியோகத்தரிடம் வினவியுள்ளார். கடமையில் யாரும் இல்லை என அவர் கூறியதுடன், தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாடுமாறும் கூறியுள்ளார்.

குறித்த காவலரணுக்கு பொறுப்பான அதிகாரியை சந்திக்க கோரியபோது அவ்வாறு எவரும் இல்லை எனவும், மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த விடயங்களை பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து பிரதி பொலிஸ்மா அதிபர் குறித்த காவலரணுக்க பொறுப்பான அதிகாரியை தொடர்பு கொண்டு விடயங்களை கேட்டறிந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொது மக்களிற்கு சேவை வழங்க முடியாத குறித்த முறிகண்டி காவலரண் தேவையற்ற ஒன்று எனவும், அதனால் பிரதேச மக்களிற்கு எவ்வித பயனும் இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்ள செல்லும் சந்தர்ப்பங்களில் அநாகரீகமான ஆடைகளுடன் நடமாடும் குறித்த உத்தியோகத்தர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து, பொதுமக்களிற்கு சேவை செய்யக்கூடிய உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளாடைகளுடன் அலையும் முறிகண்டி காவலறண் பொலிசார் - தமிழ் உத்தியோகத்தரின் நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு samugammedia முறிகண்டி பொலிஸ் காவலறண்  பொதுமக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதில்லை என பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் மக்களின் பாதுகாப்பு சேவையை உறுதி செய்வதற்காகவும், இலகுபடுத்தலிற்காகவும் முறிகண்டியில் பொலிஸ் காவலரண் 28.12.2021 அன்று தறந்து வைக்கப்பட்டது.குறித்த காவலரணில் மக்கள் முறைப்பாடுகள் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் பொது மகன் ஒருவர் சேவை பெறுவதற்கான சென்றபொழுது குறித்த காவலரணில் எவரும் இருந்திருக்கவில்லை. காவல் கடமையில் எவரும் இல்லாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காவலரணில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஓவ்வு உடையில் சாரத்துடன் இருந்ததுடன், தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் நீராடிவிட்டு மாற்றுடையில் இருந்துள்ளார்.சேவைக்கு சென்ற நபர் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தமிழ் உத்தியோகத்தரிடம் வினவியுள்ளார். கடமையில் யாரும் இல்லை என அவர் கூறியதுடன், தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாடுமாறும் கூறியுள்ளார்.குறித்த காவலரணுக்கு பொறுப்பான அதிகாரியை சந்திக்க கோரியபோது அவ்வாறு எவரும் இல்லை எனவும், மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயங்களை பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து பிரதி பொலிஸ்மா அதிபர் குறித்த காவலரணுக்க பொறுப்பான அதிகாரியை தொடர்பு கொண்டு விடயங்களை கேட்டறிந்தார்.குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், பொது மக்களிற்கு சேவை வழங்க முடியாத குறித்த முறிகண்டி காவலரண் தேவையற்ற ஒன்று எனவும், அதனால் பிரதேச மக்களிற்கு எவ்வித பயனும் இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்ள செல்லும் சந்தர்ப்பங்களில் அநாகரீகமான ஆடைகளுடன் நடமாடும் குறித்த உத்தியோகத்தர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து, பொதுமக்களிற்கு சேவை செய்யக்கூடிய உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement