• Nov 28 2024

முருகன் அண்ணன்: கணபதி தம்பியா? சைவர்களின் மனதை புண்படுத்தும் சதிமுயற்சி குறித்து டக்ளஸ் காட்டம்

Chithra / Jan 9th 2024, 1:08 pm
image

 

சைவர்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்தும் வகையில் சிங்களத் திரைப்பட மொன்றில் பிள்ளையார் தம்பியாகவும் முருகன் அண்ணனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ், 

‘கதிர திவ்யராஜ’ என்ற சிங்களத் திரைப்படமே இவ்வாறு திரிபுபடுத்தி திரையிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்ல, முருகப்பெருமானுக்கு நெற்றிப்பொட்டுக்கு பதிலாக நாமம் இடப்பட்டுள்ளதாகவும், முருகனின் வேலாயுதத்துக்கு பதிலாக சூலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கியுள்ளார்.

எனவே, சைவர்களின் வரலாறை திரிபுபடுத்தும் இந்தத் திரைப்படம் தொடர்பான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ்  கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முறையிடுமாறும் நீதிமன்றம் செல்லுமாறும் ஜனாதிபதி ரணில் இங்கு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் அறிக்கையொன்றை தருமாறும் கலாசார அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

முருகன் அண்ணன்: கணபதி தம்பியா சைவர்களின் மனதை புண்படுத்தும் சதிமுயற்சி குறித்து டக்ளஸ் காட்டம்  சைவர்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்தும் வகையில் சிங்களத் திரைப்பட மொன்றில் பிள்ளையார் தம்பியாகவும் முருகன் அண்ணனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ், ‘கதிர திவ்யராஜ’ என்ற சிங்களத் திரைப்படமே இவ்வாறு திரிபுபடுத்தி திரையிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.அதுமட்டுமல்ல, முருகப்பெருமானுக்கு நெற்றிப்பொட்டுக்கு பதிலாக நாமம் இடப்பட்டுள்ளதாகவும், முருகனின் வேலாயுதத்துக்கு பதிலாக சூலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கியுள்ளார்.எனவே, சைவர்களின் வரலாறை திரிபுபடுத்தும் இந்தத் திரைப்படம் தொடர்பான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ்  கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முறையிடுமாறும் நீதிமன்றம் செல்லுமாறும் ஜனாதிபதி ரணில் இங்கு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் அறிக்கையொன்றை தருமாறும் கலாசார அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement