• Sep 22 2024

முஷாரப் எம். பி முஸ்லீம் சமூகத்தின் துரோகி...! சபையில் வேலுகுமார் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Sep 8th 2023, 4:09 pm
image

Advertisement

முஷாரப் எம். பி முஸ்லீம் சமூகத்தின் துரோகி என  நாடாளுமன்ற உறுப்பினரான எம். வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக சனல் 4 இல் வெளியிடப்பட்டுள்ள  விடயங்களை திசை திருப்பி ஈஸ்டர் குண்டு தாக்குதல் குற்றத்தை திசைதிருப்பி அரசாங்கத்தை காப்பாற்றும் வேலையை அரச தரப்பு எம்பியான முஷாரப் முன்னெடுக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் மிகவும் கௌரவமாக வாழ்ந்த முஸ்லீம்  சமூகம் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின் நாட்டின் துரோகிகளாக பார்க்கப்பட்டார்கள். இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது வெளிவந்துகொண்டு இருக்கின்ற நிலையில் அசாத் மௌலானாவை  துரோகி என்று குறிப்பிடுகின்ற, இந்த விடயத்தை திசை திருப்ப முயலுகின்ற முஷாரப் அவர்களும் முஸ்லீம் சமூகத்தின் துரோகி. அரசை காப்பாற்ற இவ்வாறு அவர் செயற்படுவது வெட்கக்கேடான விடயம் " என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பாக பூரண விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்படுவதோடு நீதி கிட்டப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஷாரப் எம். பி முஸ்லீம் சமூகத்தின் துரோகி. சபையில் வேலுகுமார் குற்றச்சாட்டு.samugammedia முஷாரப் எம். பி முஸ்லீம் சமூகத்தின் துரோகி என  நாடாளுமன்ற உறுப்பினரான எம். வேலுகுமார் தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக சனல் 4 இல் வெளியிடப்பட்டுள்ள  விடயங்களை திசை திருப்பி ஈஸ்டர் குண்டு தாக்குதல் குற்றத்தை திசைதிருப்பி அரசாங்கத்தை காப்பாற்றும் வேலையை அரச தரப்பு எம்பியான முஷாரப் முன்னெடுக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் மிகவும் கௌரவமாக வாழ்ந்த முஸ்லீம்  சமூகம் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின் நாட்டின் துரோகிகளாக பார்க்கப்பட்டார்கள். இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது வெளிவந்துகொண்டு இருக்கின்ற நிலையில் அசாத் மௌலானாவை  துரோகி என்று குறிப்பிடுகின்ற, இந்த விடயத்தை திசை திருப்ப முயலுகின்ற முஷாரப் அவர்களும் முஸ்லீம் சமூகத்தின் துரோகி. அரசை காப்பாற்ற இவ்வாறு அவர் செயற்படுவது வெட்கக்கேடான விடயம் " என்றும்  வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இந்த விடயம் தொடர்பாக பூரண விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்படுவதோடு நீதி கிட்டப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement