திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாய நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
அகில இலங்கை விவசாய சம்மேளனம், மக்கள் போராட்ட முண்ணனியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகேவும் விசேடமாக குறித்த விவசாயிகளுக்காக ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் இன்றும் அவர்கள் இவ் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
பிரதமரினால் வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட தீர்வுக்காக இன்னும் 08 நாட்களே உள்ளன எனவும் குறித்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் முத்து நகர் பகுதியில் சூரிய மின்சாரத்துக்கு அபகரிக்கப்பட்ட காணியை விடுத்து அண்மையில் உள்ள காணிக்குள் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 09 விவசாயிகளை சீனக்குடா பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
இதனால் இம் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்தும் போராட்டங்களுடனே செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் தங்களது காணியை பெற்றுத்தரக்கோரிய போராட்டங்களை நடாத்திய போதிலும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸாரினால் இதற்கு முன்னர் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் சுமார் 14 நாட்கள் அடைக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
26ஆவது நாளாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாய நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.அகில இலங்கை விவசாய சம்மேளனம், மக்கள் போராட்ட முண்ணனியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகேவும் விசேடமாக குறித்த விவசாயிகளுக்காக ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் இன்றும் அவர்கள் இவ் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.பிரதமரினால் வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட தீர்வுக்காக இன்னும் 08 நாட்களே உள்ளன எனவும் குறித்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் முத்து நகர் பகுதியில் சூரிய மின்சாரத்துக்கு அபகரிக்கப்பட்ட காணியை விடுத்து அண்மையில் உள்ள காணிக்குள் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 09 விவசாயிகளை சீனக்குடா பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். இதனால் இம் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்தும் போராட்டங்களுடனே செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இதற்கு முன்னர் தங்களது காணியை பெற்றுத்தரக்கோரிய போராட்டங்களை நடாத்திய போதிலும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸாரினால் இதற்கு முன்னர் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் சுமார் 14 நாட்கள் அடைக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.