இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், கர்நாடக மாநிலத்தில் 1400 கோடி இந்திய ரூபா முதலீட்டில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளிர்பானம் மற்றும் இனிப்பு வகை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்காகவே முத்தையா முரளிதரன் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் கர்நாடக மாநில பாரிய மற்றும் சிறுத் தொழிற்துறை அமைச்சர் M.P.பாட்டிலை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையின் விரிவாக்கமாகவே, இந்தியாவில் தொழிற்சாலை ஆரம்பிக்க முத்தையா முரளிதரன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொழிற்சாலை நிர்மாணத்திற்காக 46 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1400 கோடி ரூபாவினை முதலீடு செய்துள்ள முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், கர்நாடக மாநிலத்தில் 1400 கோடி இந்திய ரூபா முதலீட்டில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.குளிர்பானம் மற்றும் இனிப்பு வகை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்காகவே முத்தையா முரளிதரன் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.மேலும் கர்நாடக மாநில பாரிய மற்றும் சிறுத் தொழிற்துறை அமைச்சர் M.P.பாட்டிலை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையின் விரிவாக்கமாகவே, இந்தியாவில் தொழிற்சாலை ஆரம்பிக்க முத்தையா முரளிதரன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த தொழிற்சாலை நிர்மாணத்திற்காக 46 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.