• Jun 27 2024

சஜித்துடன் கைகோர்த்த பொதுஜன பெரமுன உறுப்பினர்கள்..!

Chithra / Jun 21st 2024, 7:36 pm
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தின், ஊவா, பரணகம மற்றும் எல்ல பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த நிலையில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளனர்.

இதில் சுயேச்சை உறுப்பினர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எல்ல பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த நிமல் ரஞ்சித் வீரசிங்க,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான சமந்த கபில ரத்நாயக்க, ஹேமாவதி குமாரிஹாமி மற்றும் பாரத ரணசிங்க ஆகியோர் இவ்வாறு இணைந்து கொண்டனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக 20 இலட்சம் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் செயற்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.


சஜித்துடன் கைகோர்த்த பொதுஜன பெரமுன உறுப்பினர்கள்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.பதுளை மாவட்டத்தின், ஊவா, பரணகம மற்றும் எல்ல பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த நிலையில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளனர்.இதில் சுயேச்சை உறுப்பினர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எல்ல பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த நிமல் ரஞ்சித் வீரசிங்க,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான சமந்த கபில ரத்நாயக்க, ஹேமாவதி குமாரிஹாமி மற்றும் பாரத ரணசிங்க ஆகியோர் இவ்வாறு இணைந்து கொண்டனர்.இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக 20 இலட்சம் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் செயற்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement