• Jun 17 2024

வடக்கை அபிவிருத்தி செய்வதே எனது நோக்கம்..! ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

Chithra / May 26th 2024, 3:29 pm
image

Advertisement

 

வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

வடக்கை அபிவிருத்தி செய்வதே எனது நோக்கம். ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு  வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement