• Dec 27 2024

முல்லையில் இறங்குதுறை இல்லாததால் அவல நிலையை சந்தித்த மியன்மார் அகதிகள்- சிவனேஸ்வரன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Dec 25th 2024, 12:49 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அவல நிலைக்கு காரணம் என முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் சிவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்றையதினம்(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மிக நீண்டகாலமாக முல்லைத்தீவு கடல் பிரதேசத்தில் இந்திய இழுவைப்படகு பிரச்சினை காணப்படுகின்றது.

ஜனாதிபதி கடந்த வாரம் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அங்கு மீனவர் சம்மந்தமான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

2025 ஆண்டு தொடக்கம் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் இந்திய இழுவைப் படகு விடயம் ஆராயப்பட்டு கதைத்து முடிவெடுப்பார்கள். இந்திய இழுவை படகுகளை உடனடியாக எங்கள் கடலில் வருவதை நிறுத்தவேண்டும்.

இந்திய இழுவைப்படகினை இங்கு வருவதை தடுத்து நிறுத்தினால்தான் எங்கள் பிரதேசங்களில் தடைப்பட்ட தொழில்களான சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் போன்றனவும் கட்டுப்படுத்தி கடற்தொழிலாளர்களின் வாழ்வாதராத்தினை உயர்த்தகூடியவாறு இருக்கும்.

இதனை நாங்கள் புதிய ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் ஒருங்கிணைந்து தீர்வு தருவார்கள் என எதிர்பாக்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைவலை உரிமையாளர் சங்கம் என்று ஒன்று உள்ளது.

அங்கு நடக்கும் பிரச்சினைகளான கரைவலை கம்பான் பிரச்சினைகளை மட்டுப்படுத்தி கரைவலை சட்டங்கள் இங்கு அமுலாவதில்லை.

இவை சரியான முறையில் இயங்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த அவர் முல்லைத்தீவு  மாவட்டத்தின் சாலை, நந்திக்கடல், இரட்டைவாய்க்கால் போன்ற சிறுகடல் ஆழப்படுத்தி வீச்சுதொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேப்படுத்தவேண்டும் என நம்பி நிக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் கடற்பரப்பு எல்லைக்குள் மியன்மார் நாட்டுபடகு ஒன்று கரையடைந்துள்ளது.

சங்கத்தின் தலைவர் என்ற வகையில் நான் கரையில் நின்று சகல தரப்பினருடனும் தொடர்பினை ஏற்படுத்தி அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைமேற்கொண்டுள்ளோம்

முள்ளிவாய்க்கால் சங்க அங்கத்தவர்களும் மக்களும் திரண்டு அந்த இடத்தில் அந்த அகதிகளை கரை இறக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நின்றோம்.

சாப்பாடு உலர் உணவு பொதிகள்,குடிதண்ணீர் என்பன அந்த அகதிகளுக்கு வழங்கினோம்.

ஆனால் அந்த உயிர்களை கடலில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்காக முயற்சித்தோம்.

வள்ளம் அணைப்பதற்கான துறைமுகம் எங்கள் மாவட்டத்தில் இல்லை.  அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் ஏனையஅதிகாரிகளுக்கும் அறிவித்துக்கொள்வது முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளங்கள் தரித்து நிற்கக்கூடிய துறைமுகம் ஒன்று கட்டப்படவேண்டும்.

துறைமுகம் ஒன்று இருந்திருந்தால் மியன்மார் அகதிகள் முள்ளிவாய்க்காலில் இருந்து திருகோணமலை சென்று மீண்டும் கேப்பாபிலவிற்கு கொண்டு வந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சரியான இடத்தினை தெரிவு செய்து இறங்குதுறை ஒன்றினை அமைக்கவேண்டும் என ஜனாதிபதியை வேண்டி நிக்கின்றேன்.

மியன்மார் அகதிகள் படகு முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரைதட்டியபோது முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அதிகளவான நிதிகளில் உலர் உணவு உதவிசெய்துள்ளோம்.

முல்லைத்தீவு மாவட்ட சமாசம் எரிபொருள், குளிர்பான ஒழுங்குகள் செய்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் இருந்து வந்த இளைஞர்கள் நால்வர் அந்த அகதிகளை பார்க்கவேண்டும் என்று உலர் உணவு பொதிகளை வழங்கினார்கள்.

இராணுவத்தினர் உணவுகளை வழங்கினார்கள் கடற்படையினர் உலர் உணவுகளை வழங்கினார்கள்.

இவ்வாறு அந்த மக்களின் பசியினை போக்கி அவர்களின் உயிர்களை காப்பற்றினோம். அதன் பின்னர் கடற்படையினர் அந்த படகினை திருகோணமலை கொண்டுசென்று அந்த அகதிகளை மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தில் கொண்டு வந்துள்ளார்கள்.

அகதிகளாக வந்த அந்த மக்களை நல்ல முறையில் அரசாங்கம் கவனிக்கும் என்று நாங்கள் நம்பி நிக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்தொழிலாளர்களுக்கு சொந்தமான கடல் எல்லைக்குள் இந்த கப்பல் வந்ததால் எங்கள் சங்கத்தினர்தான் ஒருநாள்முழுக்க நின்று அந்தந்த மக்களுக்கான உதவிகளை வழங்கினோம்.

பொன்னம்பலம் ஜீவன் என்ற கடற்தொழிலாளியின் படகு உள்ளிட்ட இரண்டு படகுகள்தான் கரையில் இருந்து கப்பல் வரைக்கும் உலர் உணவுபொதிகளை கொண்டு செல்வதாக இருந்தாலும் கடற்படையினரை கொண்டுசெல்வதாக இருந்தாலும் மருத்துவர்கள்,சுகாதார தரப்பினை கொண்டுசெல்வதாக இருந்தாலும் இருபது தடவைக்கு மேல் கடல் அடிக்கு மத்தியில் சேவையினை செய்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லையில் இறங்குதுறை இல்லாததால் அவல நிலையை சந்தித்த மியன்மார் அகதிகள்- சிவனேஸ்வரன் சுட்டிக்காட்டு. முல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அவல நிலைக்கு காரணம் என முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் சிவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்றையதினம்(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மிக நீண்டகாலமாக முல்லைத்தீவு கடல் பிரதேசத்தில் இந்திய இழுவைப்படகு பிரச்சினை காணப்படுகின்றது. ஜனாதிபதி கடந்த வாரம் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அங்கு மீனவர் சம்மந்தமான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. 2025 ஆண்டு தொடக்கம் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் இந்திய இழுவைப் படகு விடயம் ஆராயப்பட்டு கதைத்து முடிவெடுப்பார்கள். இந்திய இழுவை படகுகளை உடனடியாக எங்கள் கடலில் வருவதை நிறுத்தவேண்டும்.இந்திய இழுவைப்படகினை இங்கு வருவதை தடுத்து நிறுத்தினால்தான் எங்கள் பிரதேசங்களில் தடைப்பட்ட தொழில்களான சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் போன்றனவும் கட்டுப்படுத்தி கடற்தொழிலாளர்களின் வாழ்வாதராத்தினை உயர்த்தகூடியவாறு இருக்கும்.இதனை நாங்கள் புதிய ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் ஒருங்கிணைந்து தீர்வு தருவார்கள் என எதிர்பாக்கின்றோம்.முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைவலை உரிமையாளர் சங்கம் என்று ஒன்று உள்ளது. அங்கு நடக்கும் பிரச்சினைகளான கரைவலை கம்பான் பிரச்சினைகளை மட்டுப்படுத்தி கரைவலை சட்டங்கள் இங்கு அமுலாவதில்லை. இவை சரியான முறையில் இயங்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த அவர் முல்லைத்தீவு  மாவட்டத்தின் சாலை, நந்திக்கடல், இரட்டைவாய்க்கால் போன்ற சிறுகடல் ஆழப்படுத்தி வீச்சுதொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேப்படுத்தவேண்டும் என நம்பி நிக்கின்றோம்.முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் கடற்பரப்பு எல்லைக்குள் மியன்மார் நாட்டுபடகு ஒன்று கரையடைந்துள்ளது. சங்கத்தின் தலைவர் என்ற வகையில் நான் கரையில் நின்று சகல தரப்பினருடனும் தொடர்பினை ஏற்படுத்தி அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைமேற்கொண்டுள்ளோம்முள்ளிவாய்க்கால் சங்க அங்கத்தவர்களும் மக்களும் திரண்டு அந்த இடத்தில் அந்த அகதிகளை கரை இறக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நின்றோம். சாப்பாடு உலர் உணவு பொதிகள்,குடிதண்ணீர் என்பன அந்த அகதிகளுக்கு வழங்கினோம். ஆனால் அந்த உயிர்களை கடலில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்காக முயற்சித்தோம். வள்ளம் அணைப்பதற்கான துறைமுகம் எங்கள் மாவட்டத்தில் இல்லை.  அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் ஏனையஅதிகாரிகளுக்கும் அறிவித்துக்கொள்வது முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளங்கள் தரித்து நிற்கக்கூடிய துறைமுகம் ஒன்று கட்டப்படவேண்டும்.துறைமுகம் ஒன்று இருந்திருந்தால் மியன்மார் அகதிகள் முள்ளிவாய்க்காலில் இருந்து திருகோணமலை சென்று மீண்டும் கேப்பாபிலவிற்கு கொண்டு வந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.முல்லைத்தீவு மாவட்டத்தில் சரியான இடத்தினை தெரிவு செய்து இறங்குதுறை ஒன்றினை அமைக்கவேண்டும் என ஜனாதிபதியை வேண்டி நிக்கின்றேன்.மியன்மார் அகதிகள் படகு முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரைதட்டியபோது முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அதிகளவான நிதிகளில் உலர் உணவு உதவிசெய்துள்ளோம். முல்லைத்தீவு மாவட்ட சமாசம் எரிபொருள், குளிர்பான ஒழுங்குகள் செய்துள்ளார்கள். புதுக்குடியிருப்பில் இருந்து வந்த இளைஞர்கள் நால்வர் அந்த அகதிகளை பார்க்கவேண்டும் என்று உலர் உணவு பொதிகளை வழங்கினார்கள். இராணுவத்தினர் உணவுகளை வழங்கினார்கள் கடற்படையினர் உலர் உணவுகளை வழங்கினார்கள். இவ்வாறு அந்த மக்களின் பசியினை போக்கி அவர்களின் உயிர்களை காப்பற்றினோம். அதன் பின்னர் கடற்படையினர் அந்த படகினை திருகோணமலை கொண்டுசென்று அந்த அகதிகளை மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தில் கொண்டு வந்துள்ளார்கள்.அகதிகளாக வந்த அந்த மக்களை நல்ல முறையில் அரசாங்கம் கவனிக்கும் என்று நாங்கள் நம்பி நிக்கின்றோம்.முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்தொழிலாளர்களுக்கு சொந்தமான கடல் எல்லைக்குள் இந்த கப்பல் வந்ததால் எங்கள் சங்கத்தினர்தான் ஒருநாள்முழுக்க நின்று அந்தந்த மக்களுக்கான உதவிகளை வழங்கினோம். பொன்னம்பலம் ஜீவன் என்ற கடற்தொழிலாளியின் படகு உள்ளிட்ட இரண்டு படகுகள்தான் கரையில் இருந்து கப்பல் வரைக்கும் உலர் உணவுபொதிகளை கொண்டு செல்வதாக இருந்தாலும் கடற்படையினரை கொண்டுசெல்வதாக இருந்தாலும் மருத்துவர்கள்,சுகாதார தரப்பினை கொண்டுசெல்வதாக இருந்தாலும் இருபது தடவைக்கு மேல் கடல் அடிக்கு மத்தியில் சேவையினை செய்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement