• Jan 25 2025

வடமராட்சி கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்...! கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கை...!

Sharmi / Feb 23rd 2024, 3:37 pm
image

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்றையதினம் (22) கரையொதுங்கிய  இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை JCB மற்றும் உழவு இயந்திரத்தின் மூலம் கடற்படையினர் அகற்றினர்.

கூம்பு வடிவிலான கூடாரத்தை நேற்றையதினம் கடலுக்கு சென்ற போது அவதானித்த கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் அதனை கரைக்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில்,  கரையில் இருந்து குறித்த கூடாரத்தை அப்புறப்படுத்தும் மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் JCB, உழவு இயந்திரம் கொண்டு வெற்றிலைக்கேணி கடற்படையினர் அதனை அகற்றும் பணியினை இன்று முன்னெடுத்தனர்.

அதேவேளை, கடற்படையுடன் இணைந்து கட்டைக்காடு மீனவர்களும் கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.



வடமராட்சி கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள். கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கை. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்றையதினம் (22) கரையொதுங்கிய  இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை JCB மற்றும் உழவு இயந்திரத்தின் மூலம் கடற்படையினர் அகற்றினர்.கூம்பு வடிவிலான கூடாரத்தை நேற்றையதினம் கடலுக்கு சென்ற போது அவதானித்த கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் அதனை கரைக்கு கொண்டுவந்தனர்.இந்நிலையில்,  கரையில் இருந்து குறித்த கூடாரத்தை அப்புறப்படுத்தும் மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் JCB, உழவு இயந்திரம் கொண்டு வெற்றிலைக்கேணி கடற்படையினர் அதனை அகற்றும் பணியினை இன்று முன்னெடுத்தனர்.அதேவேளை, கடற்படையுடன் இணைந்து கட்டைக்காடு மீனவர்களும் கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement