• Jun 13 2026

நீர்கொழும்பில் கடலில் மிதந்த மர்ம பொதிகள்

Aathira / Jun 13th 2026, 11:35 am
image

நீர்கொழும்பு களப்பு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 316 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த நிலையில் ஒன்பது பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பொதிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றை கரைக்கு கொண்டு வர முடியாததால் கடத்தல்காரர்கள் அவற்றை கடலில் கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பில் கடலில் மிதந்த மர்ம பொதிகள் நீர்கொழும்பு களப்பு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 316 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கடந்த புதன்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த நிலையில் ஒன்பது பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.அந்த பொதிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றை கரைக்கு கொண்டு வர முடியாததால் கடத்தல்காரர்கள் அவற்றை கடலில் கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement