• May 06 2024

பாடசாலைக்குள் நுழைந்த மர்ம நபர்- மாயமான தொலைக்காட்சி...! வவுனியா பொலிஸார் அதிரடி...!samugammedia

Sharmi / Jan 15th 2024, 2:19 pm
image

Advertisement

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில்  திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பாடசாலையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றையதினம்(14) காலை பொலிஸ் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள CCTV காணொளிகளையும் பரிசோதனைக்குட்படுத்தினர். 

இதன் போது கடந்த வெள்ளிக்கிழமை(12) மதியமளவில் ஒருவர் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது. 

CCTV காட்சியின் உதவியுடன் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த சமயத்தில் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் குறித்த தொலைக்காட்சியினை விற்பனைக்கு வழங்கியமை தெரியவந்தமையினையடுத்து சுமார் 8 மணிநேர குறுகிய நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுட்ட நபரை பொலிஸார் கைது செய்தனர்.

வவுனியா சுந்தரபுரம் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



பாடசாலைக்குள் நுழைந்த மர்ம நபர்- மாயமான தொலைக்காட்சி. வவுனியா பொலிஸார் அதிரடி.samugammedia வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில்  திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.பாடசாலையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றையதினம்(14) காலை பொலிஸ் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள CCTV காணொளிகளையும் பரிசோதனைக்குட்படுத்தினர். இதன் போது கடந்த வெள்ளிக்கிழமை(12) மதியமளவில் ஒருவர் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது. CCTV காட்சியின் உதவியுடன் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த சமயத்தில் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் குறித்த தொலைக்காட்சியினை விற்பனைக்கு வழங்கியமை தெரியவந்தமையினையடுத்து சுமார் 8 மணிநேர குறுகிய நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுட்ட நபரை பொலிஸார் கைது செய்தனர்.வவுனியா சுந்தரபுரம் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement