சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் அடிப்படையில் உரிய செயன்முறைக்கமைய தெரிவு செய்யப்படும் சிறப்புக்குரிய இலங்கை பிரஜைகளுக்காக ஜனாதிபதியால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் கௌரவ நாமங்களுக்காக பயன்படுத்தப்படும் பெயர்களை பயன்படுத்தி சில நபர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக விருதுகள் மற்றும் சன்னஸ் பத்திரங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றமை ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரியவந்துள்ளது.
அதனால் தேசிய விருதுகளுக்காக பயன்படுத்தப்படும் கௌரவ நாமங்களை வேறு தரப்பினர் தவறாக பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும்,
முறையற்ற விதத்தில் வழங்கப்படும் விருதுகள் காரணமாக இதுவரையில் இலங்கையில் கௌரவிப்புக்கு பாத்திரமானவர்களுக்கு செய்யும் அநீதியாகவும் அவமரியாதையாகவும் அமைவதாக ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறான செற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகள். ஜனாதிபதியின் செயலாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் அடிப்படையில் உரிய செயன்முறைக்கமைய தெரிவு செய்யப்படும் சிறப்புக்குரிய இலங்கை பிரஜைகளுக்காக ஜனாதிபதியால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் கௌரவ நாமங்களுக்காக பயன்படுத்தப்படும் பெயர்களை பயன்படுத்தி சில நபர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக விருதுகள் மற்றும் சன்னஸ் பத்திரங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றமை ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரியவந்துள்ளது.அதனால் தேசிய விருதுகளுக்காக பயன்படுத்தப்படும் கௌரவ நாமங்களை வேறு தரப்பினர் தவறாக பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், முறையற்ற விதத்தில் வழங்கப்படும் விருதுகள் காரணமாக இதுவரையில் இலங்கையில் கௌரவிப்புக்கு பாத்திரமானவர்களுக்கு செய்யும் அநீதியாகவும் அவமரியாதையாகவும் அமைவதாக ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறான செற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.