• Jan 16 2025

கொழும்பில் இடம்பெறவுள்ள ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி...!

Sharmi / Jan 6th 2025, 9:29 am
image

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகரும் தலைவருமான அனு குமரேசன் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 6 - வெள்ளவத்தையில் இன்று நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அனு குமரேசன், 

கடந்த வருடம் இலங்கையின் 17 மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கு பெற்றிருந்தார்கள்.

இதில் பலர் வெற்றிவாகை சூடியிருந்தார்கள். அத்துடன் இந்த போட்டி நிகழ்ச்சியின் மூலமாக போட்டியாளர்களுக்கு துறைசார் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் திறனாய்வினூடாக கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கப்படுவதோடு பணப் பரிசுகளையோ அல்லது வேறெந்த கவர்ச்சிகரமான பரிசுகளையோ காட்சிப்படுத்தாமல் முழுவதுமாக அவர்களின் திறமைகளையும் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, போட்டியாளர்களின் திறமைகளுக்கு ஒரு களமாகவும் நடாத்தப்படும் ஒரு தேசிய போட்டி நிகழ்வாகும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் பல பாகங்களைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்காவினூடாக" கடந்த காலங்களில் சர்வதேச ரீதியாக அழகுக்கலை போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளதுடன் இதன் தலைவரான அனு குமரேசன் அண்மையில் "ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்" இல் அதிக ஒப்பனைக் கலைஞர்களை ஒன்று திரட்டி மிகக் குறுகிய நேரத்தில் கண் அலங்காரம் செய்து உலக சாதனைப் படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இடம்பெறவுள்ள ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகரும் தலைவருமான அனு குமரேசன் தெரிவித்தார்.இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 6 - வெள்ளவத்தையில் இன்று நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த அனு குமரேசன், கடந்த வருடம் இலங்கையின் 17 மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கு பெற்றிருந்தார்கள். இதில் பலர் வெற்றிவாகை சூடியிருந்தார்கள். அத்துடன் இந்த போட்டி நிகழ்ச்சியின் மூலமாக போட்டியாளர்களுக்கு துறைசார் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் திறனாய்வினூடாக கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கப்படுவதோடு பணப் பரிசுகளையோ அல்லது வேறெந்த கவர்ச்சிகரமான பரிசுகளையோ காட்சிப்படுத்தாமல் முழுவதுமாக அவர்களின் திறமைகளையும் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, போட்டியாளர்களின் திறமைகளுக்கு ஒரு களமாகவும் நடாத்தப்படும் ஒரு தேசிய போட்டி நிகழ்வாகும் எனவும் தெரிவித்தார்.இதேவேளை இலங்கையின் பல பாகங்களைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்காவினூடாக" கடந்த காலங்களில் சர்வதேச ரீதியாக அழகுக்கலை போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளதுடன் இதன் தலைவரான அனு குமரேசன் அண்மையில் "ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்" இல் அதிக ஒப்பனைக் கலைஞர்களை ஒன்று திரட்டி மிகக் குறுகிய நேரத்தில் கண் அலங்காரம் செய்து உலக சாதனைப் படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement