• Jan 07 2025

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிப்பதே திட்டம் - அமைச்சர் விஜித்த

Chithra / Jan 6th 2025, 9:32 am
image


இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு கொண்டுவருவதே எமது இலக்காகும் என வெளிவிவகார, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பெந்தொட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத நிலையம் ஒன்றை  ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

சுற்றுலாத்துறை என்பது வெறுமனே கைத்தொழில் மாத்திரமல்ல. அது எமது நாட்டின் கலை, கலாசாரத்தை உலகுக்கு கொண்டுசெல்லும் மத்திய நிலையமாகும். அதனால் சுற்றுலா துறையை கிராமிய மக்களுடனும் தொடர்புபடுத்துவதே எமது திட்டமாகும். 

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி, இந்த வருடத்தின் சுற்றுலா பயணிகளின் வருகை இலக்கான 2 மில்லியனை பூரணப்படுத்தியுள்ளோம்.

அதனால் இந்த வருடம் அந்த எண்ணிக்கையை 3 மில்லியன் வரை அதிகரித்துக்கொள்னவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதன்போது, சுற்றுலா பயணிகளின் வருகை அளவை அதிகரிப்பது போன்று சுற்றுலா பகுதிகளின் முன்னேற்றத்தையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். 

ஆயுர்வேத மூலிகை, எமது சம்பிரதாய, கலாசார உரிமைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் என அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுபவிக்க கிடைக்கிறது. 


எமது நாட்டின் பிரதிபலிப்பு, எமது நாட்டின் கலாசாரம், எமது நாட்டின் வரலாறு. இந்த மூன்று விடயங்களையும் சுற்றுலா பயணிகளுக்கு குறுகிய காலத்தில் அனுபவிக்க முடியுமாகிறது. அதேபோன்று எமது வரலாற்றை உலகுக்கு கொண்டு செல்லும் மத்திய நிலையமாக சுற்றுலாத்துறை திகழ்கிறது.

அத்துடன் சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலாவுக்காக மாத்திரமின்றி இங்கு வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இது இந்த காலத்தில் நாங்கள் எதிர்கொண்டுவரும் பாரிய பிரச்சினையாகும். 

நாங்கள் எமது சுற்றுலா கைத்தொழிலை உயர் தரத்தில் மேற்கொள்ளவதன் மூலம் அந்த வியாபார நடவடிக்கைகளை தோற்கடிக்க முடியும் என தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிப்பதே திட்டம் - அமைச்சர் விஜித்த இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு கொண்டுவருவதே எமது இலக்காகும் என வெளிவிவகார, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.பெந்தொட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத நிலையம் ஒன்றை  ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,சுற்றுலாத்துறை என்பது வெறுமனே கைத்தொழில் மாத்திரமல்ல. அது எமது நாட்டின் கலை, கலாசாரத்தை உலகுக்கு கொண்டுசெல்லும் மத்திய நிலையமாகும். அதனால் சுற்றுலா துறையை கிராமிய மக்களுடனும் தொடர்புபடுத்துவதே எமது திட்டமாகும். கடந்த டிசம்பர் 31ஆம் திகதி, இந்த வருடத்தின் சுற்றுலா பயணிகளின் வருகை இலக்கான 2 மில்லியனை பூரணப்படுத்தியுள்ளோம்.அதனால் இந்த வருடம் அந்த எண்ணிக்கையை 3 மில்லியன் வரை அதிகரித்துக்கொள்னவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.இதன்போது, சுற்றுலா பயணிகளின் வருகை அளவை அதிகரிப்பது போன்று சுற்றுலா பகுதிகளின் முன்னேற்றத்தையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். ஆயுர்வேத மூலிகை, எமது சம்பிரதாய, கலாசார உரிமைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் என அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுபவிக்க கிடைக்கிறது. எமது நாட்டின் பிரதிபலிப்பு, எமது நாட்டின் கலாசாரம், எமது நாட்டின் வரலாறு. இந்த மூன்று விடயங்களையும் சுற்றுலா பயணிகளுக்கு குறுகிய காலத்தில் அனுபவிக்க முடியுமாகிறது. அதேபோன்று எமது வரலாற்றை உலகுக்கு கொண்டு செல்லும் மத்திய நிலையமாக சுற்றுலாத்துறை திகழ்கிறது.அத்துடன் சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலாவுக்காக மாத்திரமின்றி இங்கு வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இது இந்த காலத்தில் நாங்கள் எதிர்கொண்டுவரும் பாரிய பிரச்சினையாகும். நாங்கள் எமது சுற்றுலா கைத்தொழிலை உயர் தரத்தில் மேற்கொள்ளவதன் மூலம் அந்த வியாபார நடவடிக்கைகளை தோற்கடிக்க முடியும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement