• Nov 24 2024

தேசிய மட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டி -தெல்லிப்பழை மகாஜனா சாதனை..!

Sharmi / Oct 16th 2024, 8:49 am
image

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பெண்கள் உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரியின் 17, 20 வயது அணிகள் இரண்டும் சம்பியன்களாகியுள்ளன.

குயின்சி தலைமையிலான 20 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில் பொலனறுவை பென்டிவெல கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றி பெற்றது. 

முதல் பாதி ஆட்டத்தில் லயன்சிகா, அணித் தலைவி குயின்சி ஆகியோரது கோல்களுடன் 2:0 என மகாஜனா முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதியாட்டத்திலும் லயன்சிகா, குயின்சி ஆகியோர் அதிரடியாக ஒவ்வொரு கோல்களைப் பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என சம்பியனாகியது.

உமாசங்கவி தலைமையிலான 17 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில்  குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் அணித்தலைவி உமாசங்கவி, கல்சிகா ஆகியோரது கோல்களுடன் 2:0 என மகாஜனா முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதியாட்டத்திலும் உமாசங்கவி, கியூஸ்ரிகா ஆகியோர் அதிரடியாக ஒவ்வொரு கோல்களைப் பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என தெல்லிப்பழை சம்பியனாகியது.


தேசிய மட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டி -தெல்லிப்பழை மகாஜனா சாதனை. பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பெண்கள் உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரியின் 17, 20 வயது அணிகள் இரண்டும் சம்பியன்களாகியுள்ளன.குயின்சி தலைமையிலான 20 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில் பொலனறுவை பென்டிவெல கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றி பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் லயன்சிகா, அணித் தலைவி குயின்சி ஆகியோரது கோல்களுடன் 2:0 என மகாஜனா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியாட்டத்திலும் லயன்சிகா, குயின்சி ஆகியோர் அதிரடியாக ஒவ்வொரு கோல்களைப் பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என சம்பியனாகியது.உமாசங்கவி தலைமையிலான 17 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில்  குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றி பெற்றது.முதல் பாதி ஆட்டத்தில் அணித்தலைவி உமாசங்கவி, கல்சிகா ஆகியோரது கோல்களுடன் 2:0 என மகாஜனா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியாட்டத்திலும் உமாசங்கவி, கியூஸ்ரிகா ஆகியோர் அதிரடியாக ஒவ்வொரு கோல்களைப் பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என தெல்லிப்பழை சம்பியனாகியது.

Advertisement

Advertisement

Advertisement